ADDED : பிப் 11, 2025 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, : ராஜ்யசபாவில் சபை நடவடிக்கைகளை நடத்தும் குழுவில், காங்கிரசின் ராஜீவ் சுக்லா மற்றும் அ.தி.மு.க.,வின் தம்பிதுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜ்யசபா தலைவராக பதவி வகித்து வரும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் இல்லாத நேரத்தில், சபையை நடத்த உறுப்பினர்கள் குழு உள்ளது. இந்த குழுவை சபை தலைவரே நியமிப்பார். இதில் இடம்பெறும் உறுப்பினர்கள், சபை தலைவருக்கு உதவும் பணியை மேற்கொள்வர்.
அந்த குழுவில், காங்கிரசின் ராஜீவ் சுக்லா மற்றும் அ.தி.மு.க.,வின் தம்பிதுரை ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் நேற்று தெரிவித்தார்.