சுற்றுலா மையமாக தங்கச்சுரங்கம் எம்.பி., முனிசாமி நம்பிக்கை
சுற்றுலா மையமாக தங்கச்சுரங்கம் எம்.பி., முனிசாமி நம்பிக்கை
ADDED : பிப் 01, 2024 07:15 AM

தங்கவயல்: ''தங்க சுரங்கத்தை சுற்றுலா மையம் ஆக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்று கோலார் பா.ஜ., -எம்.பி., முனிசாமி தெரிவித்தார்.
தங்கவயல் பயணியர் விடுதியில் நேற்று அவர் அளித்த பேட்டி
தங்கவயலில் வளமான தங்கம் இருந்தபோது சில அதிகாரிகள், அப்போதைய சில அரசியல் வாதிகள் கணக்கற்ற அளவில் தங்கத்தை திருடிஉள்ளனர்.
இது, நமது வளமான நாட்டுக்கு பெரியஅவமானம்.
தங்கவயல் சுற்றுலா மையம் ஆக்கப்படும். தண்ணீரே இல்லாத தங்கச் சுரங்கத்தைசுற்றுலா தலமாக்க ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
பாரத தங்கச் சுரங்க நிறுவனத்துக்குக்கு உட்பட்ட ஒரு தங்கச் சுரங்கமான 'சிக்ரிகுண்டா' சுரங்கத்தில் தங்க வளம் உள்ளது.
அதனை மறுபடியும் புனரமைக்க வாய்ப்பு உள்ளது. இது, மத்திய சுரங்க அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.
தங்கவயலில் உள்ள என்.ஐ.ஆர்.எம்., என்ற நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ராக் மெக்கானிச ஆய்வு மையத்தில் இருந்து தான் அயோதியில் கட்டப்பட்ட, 'ராம் லல்லா' கோவில் கட்டடத்துக்கு கற்கள் பரிசோதிக்கப்பட்டன. இது, நமக்கு பெருமை அளிக்கிறது.
இந்த என்.ஐ. ஆர்.எம்., ஆய்வு மையத்தை தங்கவயலில் இருந்து இடம் மாற்ற திட்டமிடப்பட்டு இருந்தது.
அதனை இங்கிருந்து வெளியேறாமல் தடுக்க கோரியதன் பயனால், தங்கவயலில் நீடிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.