ADDED : பிப் 18, 2024 01:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,மல்யுத்தத்தில் பெண்கள் பங்கேற்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தங்கல் என்ற ஹிந்தி படத்தில், அமீர்கானின் இளைய மகளாக நடித்தவர் சுஹானி பாட்நகர், 19. ஹரியானாவின் பரிதாபாத்தைச் சேர்ந்த இவருக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் கைகளில் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டன.
இதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அரிதான தசை அலர்ஜி நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.