பதற்றத்தில் தாமரை முனி!
ஒருவழியாக மாவட்ட தாமரையில் 'தல' யார் என்பது முடிவுக்கு வந்தாச்சு. ஏற்கனவே இருந்தவரையே தொடரும்படி மாநில தலைமை ஒப்புதல் கொடுத்தாச்சு.
லோக்., தொகுதியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஏமாற கூடாது என்பதில் மேலிடமும் உன்னிப்பாக கவனித்து வராங்க. ஆனால் இவங்க கூட்டணியில் 'சீட்' புல்லுக்கட்டை துாக்க வெச்சிட்டா என்ன செய்வது என்பதே தாமரைகாரர்களுக்கு தலைவலி ஏற்பட்டிருக்குதாம்.
மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் ஏற்கனவே தலைவராக இருந்தவர்களையே தலைவர் ஆக்க வேண்டும் என்று செங்கோட்டை முனிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கு. அதில் தடுமாற்றம் ஏற்பட்டால் ஓட்டுக்கு வேட்டு வெச்சிடு வாங்கன்னு அரசல் புரசலா பேசி வராங்க. அசெம்பிளி தேர்தலில் பூவுக்கு ஓட்டு சரிந்ததற்கு யார், எவர், என்ன காரணம்னு மேலிடம் வரை ஏற்கனவே தெரியுமாம்.
கோல்டு சிட்டியில் தொடர்ந்து ஒரு குடும்ப ஆதிக்கமே இருப்பதன் வெறுப்பை தலை தூக்கவிடக் கூடாதென உள்குத்து வேலையை செங்கோட்டைகாரர் தான் பின் இருந்து இயக்கியதாக அப்போது பேசிக்கினாங்க.
அசெம்பிளிக்கு சீட் வாங்கினவரோ, வந்த தொகையை பதுக்கி பத்திரப்படுத் திட்டாருன்னு சும்மா மேலிடத்திலும் ஒரு தரப்பில் போட்டுக் கொடுத்திருக்காங்க.
இது போல, லோக் தேர்தலில் நடந்திட கூடாதென 'எச்சரிக்கை'யா வேலையை தொடங் கிட்டாங்க. இருந்தாலும் செங்கோட்டை தாமரைக் காரர் பதட்டமாகவே இருக்கிறாரு. யாரும் விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ள பரபரப்பாக இருக்குறாரு.
மந்திரி மைந்தர் வரார்!
ஸ்டேட் உணவு அமைச்ச ருக்கு ஒருமுறை தோற்றதன் பாடம் நிறைய அனுபவங்களை கொடுத்திடுச்சாம்.
பட்ட தோல்வியை சரிப்படுத்திக்கொள்ளவே ஸ்டேட் மினிஸ்ட்டர் ஆனார். அவரோட வெயிட்டை காட்ட, மறுபடியும் கணிசமான ஓட்டுகளை அள்ள கைகாரர்களை எப்படி ஒண்ணு சேர்க்கனும்னு தெரியுமாம். கடந்த முறை ப.பேட்டை, மாலூர், சீனிவாசப்பூர் தொகுதிகளில் ஓட்டு சரிந்திருந்தது. இம்முறை அந்த விரிசலை அடைத்து விட்டாராம். அதனால் கோதாவில் இறக்க மகனை தயார் படுத்தி ட்டாராம்.
கையில் இவருக்கு கிடைக்காத வெற்றி வேறு யாருக்கும் இவரோட கட்சியில் கிடைக்க கூடாது. எதிரி வேண்டுமானால் ஜெயிக்கட்டும், தப்பித் தவறி கூட இவரை மீறி இவர் கட்சியில் போட்டியிடுபவர் ஜெயிக்கவே கூடாதென்ற இவரின் இலக்கு ரத்தத்தில் ஊறிவிட்ட லட்சியம்னு பலருக்கும் தெரியுமாம்.
சீனிவாசப்பூர் அசம்பிளி தேர்தலில் கூட கை தோற்றதற்கு இவரது டொனேஷன் ஜாஸ்தி என தோற்றவர் மனசு காயம் ஏற்பட்டிருக்குதாம்.
லோக்., தேர்தலில் மறுபடியும் கை கட்சியில் வேட்பாளர் யார் என்ற குழப்பமும் தீரவில்லை. ஸ்டேட் உணவு மினிஸ்டரின் 'மைந்தர்' ஆபிசராக இருந்தவர், பதவிக்கு ராஜினாமா கொடுத்து தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி இருக்கிறார்.
இவரை மினிஸ்ட்டர் செங்கோட்டைக்குள் அனுப்புவதே டார்கட் என்று மாவட்டத்துக்கே தெரியுமாம்.