தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தங்கவயல் நகராட்சி நலத்திட்ட உதவிகள்

தங்கவயல் நகராட்சி நலத்திட்ட உதவிகள்

தங்கவயல் நகராட்சி நலத்திட்ட உதவிகள்


ADDED : ஜன 10, 2025 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2025 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்:தங்கவயல் நகராட்சி நிதியில் இருந்து நேற்று 20 பேருக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், சிறப்பான மதிப்பெண் பெற்ற 128 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா தங்கவயல் நகராட்சியில் நடந்தது.

தங்கவயல் நகராட்சியில் எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்.எப்.சி., எனும் ஸ்டேட் பைனான்ஸ் கமிஷன் நிதி 5 சதவீத தொகையில், 20 பேருக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன.

அதேபோன்று, எஸ்.எப்.சி., நிதியில் ஒதுக்கப்பட்ட 7.25 சதவீத தொகை, நகராட்சி வருவாயில் 24.10 சதவீதம் நலத்திட்ட நிதியில் தங்கவயல் அரசுப்பள்ளிகள், அரசு மானியம் பெற்ற பள்ளிகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் 128 பேருக்கு லேப்டாப் வழங்கும் விழாவும் நடந்தது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் நகராட்சித் தலைவர் இந்திரா காந்தி, துணைத்தலைவர் ஜெர்மன், நகராட்சி உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us