ADDED : பிப் 02, 2024 11:07 PM
12,000 ஏக்கரை பெறுவாங்களா?
ம.அரசின் பாதுகாப்பு துறையின் கனரக தொழிற்சாலையான பெமல் நிறுவனம், பயன் படுத்தாமல் வைத்திருந்த 972 ஏக்கர் நிலத்தை சென்ட்ரல் இடமிருந்து ஸ்டேட் காரங்க சாமர்த்தியமா வாங்கிட்டாங்க. இதனை தொழில் வளர்ச்சித்துறை வசம் ஒப்படைக்க போறாங்க.
அதேபோல ம.அரசின் சுரங்கத் துறை வசம் பயன் படுத்தாமல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சும்மா வைத்திருப்பதையும் வாங்க, மாநில அரசே ஆலோசனை நடத்திட்டு வர்ராங்க.
காலி நிலம் காட்டி, நடத்தி வரும் அரசியல் நாடகங்கள் எப்போது முடிவுக்கு வரப்போகுதோ. மீண்டும் தங்கம் உற்பத்தி செய்யப்போவதாக ஸ்டன்ட் காட்ட துவங்கி இருக்காங்க.
வீடுகள் சொந்தம் ஆக்கும் பிரச்னையும் தீர்க்கப்படாமலே இருக்குது. மைன்ஸ் பகுதியின் ஒரு லட்சம் ஓட்டுகள் உள்ளதை கட்சிகள் வேணாம்னு சொல்லவா போறாங்க.
ஓட்டுகள் மீது கவனம் செலுத்துறவங்க, முன்னாள் தொழிலாளர் வீடுகளை, குடியிருப்பவங்களுக்கே சொந்தம் ஆக்குவது பற்றியும் முடிவெடுப்பாங்களான்னு மைனிங் பகுதிக்காரங்க அங்கலாய்க்கிறாங்க.
ஆர்வம் இல்லாதபுல்லுக்கட்டு!
மாநில அளவில் பூவும், புல்லுக்கட்டும் கூட்டணி. இதில் கோலார் தொகுதி யாருக்கு என்பதில் முடிவாகலை. இத்தொகுதியை புல்லுக்கட்டு விட்டுத் தந்து, பெங்களூரு ஊரகம் மீது குறியா இருக்காங்களாம்.
புல்லுக்கட்டு, ஐந்து சீட் கிடைத்தால் போதுமென இருக்காங்க. இதில் ஒரே குடும்பத்துக்கு மூன்று தேவையாம். அதனால் கோலாரு பற்றி இவங்களுக்கு ஆர்வமே இல்லையென அவங்க மேலிட வட்டாரத்தில் தகவல் இருக்குதாம்.
எனவே, கோலாரு புல்லுக்கட்டுக் காரங்க, பூவை ஆதரிக்க தயாராயிட்டாங்களாம். இவங்களுக்கு ஒரு நீலக்கொடி கோஷ்டி ஆதரவு என சொல்றாங்க. இன்னொரு கோஷ்டி, யாரை ஆதரிப்பாங்களோ. கடைசி நேரத்தில் தான் முடிவை தெரிவிப்பாங்களாம்.
லோக்சபா தேர்தலில் மூன்றாவது நபர் யார்?
கோலார் லோக்சபா தேர்தலில் முன்னாள் எம்.பி.,யின் மருமக பிள்ளைக்கு கை கட்சியில் சீட் கேட்டு வராங்க. ஆனால் பட்டியலில் 12 பேர் இருக்காங்களாம்.
இவர்களில் ஆறு பேர், முன்னாள் குடும்பத்துக்காக விட்டுத் தர தயாராக இருக்காங்களாம். இதுவும் ஒரு வித 'செட் அப்' பாலிடிக்ஸ் போல உள்ளது. கோளாறு ஏற்படாமல் இருக்க, கை கட்சியில் சர்வே எடுத்து முடித்திருக்காங்க. சீட் பெற மாலுார், கோலார், பெங்களூரு காரர்கள் டில்லியில் தங்கி இருந்தாங்க. தலைமை யார் பக்கம் என்பது மதில் மேல் பூனையாகவே இருக்குதாம்.
முன்னாள் எம்.பி., குடும்பத்தில் மூன்றாவது நபர் ஒருவர் பதவிக்கு வரப்போறாருன்னு இப்பவே தொகுதியில் பேசுறாங்க.

