ADDED : ஜன 10, 2025 11:16 PM

கருப்பு உளுந்து பெண்களுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒன்று. இதை வைத்து செய்யும் எல்லா ரெசிபியும் அவ்வளவு ஆரோக்கியமானது.
சிறு குழந்தைகளும், பெரியவர்களும் கருப்பு உளுந்தில் செய்யும் கஞ்சி, கூழ், லட்டு ஆகியவற்றை செய்து சாப்பிடலாம். கருப்பு உளுந்தில் லட்டு செய்யலாம்.
செய்முறை:
l ஒரு வாணலியில் கருப்பு உளுந்து, பச்சரிசி இரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
l ஆறியதும் மிக்சியில் போட்டு, அதனுடன் பேரீச்சம் பழம், நாட்டு சர்க்கரை சேர்த்து அரைத்து பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
l வாணலியில் நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து, அதை அரைத்து வைத்த பொருளுடன் சேர்த்து உருண்டை உருண்டையாக பிடித்து எடுத்து வைக்கவும்.
இதோ சுவையான 'கருப்பு உளுந்து லட்டு' ரெடி. தின்ன தின்ன திகட்டாது. ஒருமுறை செய்து பாருங்களேன்.
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து - 1 கப்
நாட்டுச் சர்க்கரை - அரை கப்
விதை நீக்கிய பேரிச்சம் பழம் - 10
ஏலக்காய் - 2
பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - கால் கப்
முந்திரி பருப்பு - 15
- நமது நிருபர் -

