sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 ஆதாருக்கு உருவம் தந்தது மத்திய அரசு

/

 ஆதாருக்கு உருவம் தந்தது மத்திய அரசு

 ஆதாருக்கு உருவம் தந்தது மத்திய அரசு

 ஆதாருக்கு உருவம் தந்தது மத்திய அரசு

13


UPDATED : ஜன 09, 2026 03:04 AM

ADDED : ஜன 09, 2026 03:00 AM

Google News

UPDATED : ஜன 09, 2026 03:04 AM ADDED : ஜன 09, 2026 03:00 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யு.ஐ.டி.ஏ.ஐ., ஆதார் சேவைகள் குறித்து பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், 'மாஸ்காட்' எனப்படும் அடையாள சின்னத்தை ஆதாருக்கு மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவரின் விரல் ரேகை, கருவிழி படலத்தின் பதிவுகளை பெற்று, 12 இலக்க ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. அரசு நலத்திட்டங்கள், வங்கிக் கணக்கு துவங்குதல், மானியங்கள், வருமான வரி உள்ளிட்ட பல சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக உள்ளது.

ஆதார் எண் வழங்குதல், புதுப்பித்தல் போன்றவற்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்வகிக்கிறது. ஆதாருக்கு உருவம் ஒன்றை வழங்க ஆணையம் முடிவு செய்தது. நிறுவனம், அமைப்பு, அணி, நிகழ்ச்சி அல்லது திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்படும். இதற்கு 'மாஸ்காட்' என்று பெயர்.

ஆதாருக்கான, 'மாஸ்காட்' உருவாக்கத்தில் பொது மக்கள் பங்குபெறும் வகையில் அரசின், www.mygov.in தளத்தில் இரண்டு கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டன. நாடு முழுதுமிருந்து மாணவர்கள், வடிவமைப்பாளர்கள் உட்பட, 875 பேர், 'மாஸ்காட்' சின்னங்களை வடிவமைத்து அனுப்பி இருந்தனர்.

அதில், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அருண் கோகுல் வடிவமைத்த மாஸ்காட் தேர்வு செய்யப்பட்டது. பெயர் சூட்டும் பிரிவில் மத்தியப் பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த ரியா ஜெயின் தேர்ந்தெடுத்த 'உதய்' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது.

வெற்றியாளர்கள் அறிவிப்பு மற்றும் ஆதாரின் மாஸ்காட் அறிமுக நிகழ்ச்சி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில் யு.ஐ.டி.ஏ.ஐ., தலைவர் நீல்கந்த் மிஸ்ரா பங்கேற்று ஆதார் மாஸ்காட்டான உதயை அறிமுகப்படுத்தினார்.

ஆதார் தொடர்பான பத்திரிகை விளம்பரங்கள், வீடியோக்கள், போஸ்டர்கள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் இனி, 'உதய்' சின்னத்தை வைத்து தகவல்கள் வெளியிடப்படும்.






      Dinamalar
      Follow us