ADDED : நவ 17, 2024 11:30 PM

ஜார்க்கண்டில் வங்கதேசத்தினர் ஊடுருவுகின்றனர் என பா.ஜ., குற்றஞ்சாட்டுகிறது. அவர்களை திருப்பி அனுப்ப வேண்டிய கடமை மத்திய அரசுக்கு தான் உள்ளது. இந்த விவகாரம் குறித்து, நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய போது, தன்னிடம் தகவல் இல்லை என கூறியது.
பிருந்தா காரத், மூத்த தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூ.,
ராகுலை பொருட்படுத்தவில்லை!
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் பேச்சுகளை, மக்கள் பொருட்படுத்துவதில்லை. மத்திய அரசுக்கு எதிராக பொறுப்பற்ற முறையில் அவர் பேசி வருகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை போன்று, ராகுல் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன்.
நிதின் கட்கரி, மத்திய அமைச்சர், பா.ஜ.,
சவாலை ஏற்பாரா மோடி?
பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு வரும்போது பொய்களைச் சொல்லிவிட்டு செல்கிறார். உதவித்தொகை திட்டத்தால் பொருளாதாரம் சீரழியும் என்றார். அதே திட்டத்தை தான், மஹாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ., வாக்குறுதியாக தந்துள்ளது. குற்றச்சாட்டை நிரூபித்தால், அரசியலில் இருந்து விலகுகிறேன்.
சித்தராமையா, கர்நாடக முதல்வர், காங்கிரஸ்