இந்திய மக்களின் இரக்க குணம்: பிரிட்டன் பயணியின் பதிவு வைரல்
இந்திய மக்களின் இரக்க குணம்: பிரிட்டன் பயணியின் பதிவு வைரல்
ADDED : டிச 10, 2025 05:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்திய மக்களின் இரக்க குணம் குறித்து பிரிட்டன் பயணியின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது.
பிரிட்டனை சேர்ந்த அலெக்ஸ்வாண்டர்சிட் என்பவர், இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து, பல்வேறு மக்களையும் சந்தித்தது குறித்து தனது அனுபவங்களை வாழ்க்கை நியாயமானது அல்ல என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
அந்த பதிவில் இந்தியாவில் நிலவும் கடுமையான சூழல், வறுமை, செல்வம் இரண்டும் இருப்பதும், சமூக வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்திய மக்களின் உண்மையான இரக்கம், மகிழ்ச்சி, பெருந்தன்மை ஆகியவை தனக்கு ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவு சமூகவலைதளத்தில் வைரலானது.
நெட்டிசன்கள் அலெக்ஸ்வாண்டர்சிட் பதிவிற்கு ஆதரவு தெரிவித்து வரவேற்பு அளித்துள்ளனர்.

