தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/முடிவுரை எழுதப்படும்!

முடிவுரை எழுதப்படும்!

முடிவுரை எழுதப்படும்!


UPDATED : அக் 15, 2026 12:00 AM

ADDED : அக் 14, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 12:00 AM ADDED : அக் 14, 2026 09:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முடிவுரை எழுதப்படும்!


பிரதமர் மோடி விரைவில் முன்னாள் பிரதமர் என்ற நிலைக்கு ஆளாகப் போகிறார். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தை அடக்குமுறை மூலம் அவர் ஒடுக்கப் பார்க்கிறார். அவரது ஆணவப் போக்குக்கு மக்கள் முடிவுரை எழுதுவர். ஞானேஷ் குமார் தப்பி ஓடி ஒளிய முடியாது.
- சச்சின் பைலட்
மூத்த தலைவர், காங்கிரஸ்



அமைதி காப்பது ஏன்?


ஜவகர்லால் நேரு பல்கலையில் பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் அங்கோம்சா பிமால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்., – எம்.பி.,யான அவர், பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை? இந்த விவகாரத்தில் சோனியா, பிரியங்கா அமைதி காப்பது ஏன்? ராகுலுக்கு எந்த நல்ல பண்புகளையாவது சோனியா கற்றுக் கொடுத்துள்ளாரா?
- அன்னபூர்ணா தேவி
மத்திய அமைச்சர், பா.ஜ.,



நீர்த்து போய்விடாது!


தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், 20 ஆண்டுகளுக்கு முன், கேரள பொதுப்பணித் துறை செயலராக பணியாற்றிய போது நடந்ததாகக் கூறப்படும் சாலை திட்ட ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 20 ஆண்டுகள் ஆகி விட்டது என்பதற்காக ஒரு குற்றமோ, ஊழலோ நீர்த்து போய் விடாது.
- ரமேஷ் சென்னிதலா
கேரள உள்துறை அமைச்சர், காங்கிரஸ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us