ADDED : ஜூலை 04, 2025 11:43 PM

நம் நாட்டை போல சிறுபான்மையினருக்கு அதிக வசதிகள் வேறு எந்த நாட்டிலும் வழங்கப்படுவதில்லை. இங்கு அனைத்து தரப்பினரும் சமமாக நடத்தப்படுகின்றனர். சிறுபான்மையினர் பெயரில் காங்., ஓட்டு அரசியல் செய்கிறது. பா.ஜ., மதச்சார்பற்ற கட்சி. ஆனால், காங்., ஒரு வகுப்புவாத கட்சி.
கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர், பா.ஜ.,
எங்களுக்கு ஆதரவு கொடுங்க!
பீஹார் சட்டசபை தேர்தலில், அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி போட்டியிடாமல் விலக வேண்டும். காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணிக்கு அக்கட்சி கொள்கை அளவில் ஆதரவு அளிக்க வேண்டும். அப்படி செய்தால், பா.ஜ., கூட்டணியின் வெறுப்பு அரசியல் முடிவுக்கு வரும்.
மனோஜ் குமார் ஜா, ராஜ்யசபா எம்.பி., ராஷ்ட்ரீய ஜனதா தளம்
முற்றிலும் வதந்தி!
நான் புதுக்கட்சி துவங்க உள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் வதந்தி. பா.ஜ.,வின் உண்மையான தொண்டன் நான். புதுக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை. என் வளர்ச்சிக்கு பா.ஜ.,வே காரணம். கடைசி வரை பா.ஜ., தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.
திலீப் கோஷ், மூத்த தலைவர், பா.ஜ.,