அஹிம்சை பதிவை வெளியிட்டு வாங்கி கட்டி கொண்ட காங்.,
அஹிம்சை பதிவை வெளியிட்டு வாங்கி கட்டி கொண்ட காங்.,
ADDED : மே 08, 2025 12:25 AM

பெங்களூரு: பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்திற்கு பின், கர்நாடக காங்., தலைமையகம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'மனித குலத்தின் மிக சக்திவாய்ந்த ஆயுதம் அமைதி' என குறிப்பிட்டு இருந்தது.
நம் ராணுவத்தினர் பதிலடி தந்த நேரத்தில் இப்படியொரு பதிவை வெளியிட்டதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சுதாரித்த காங்., தலைமை அந்தப் பதிவை உடனடியாக நீக்கிவிட்டு, நம் விமானப் படையைப் பாராட்டி மற்றொரு பதிவை வெளியிட்டது.
அதில், 'உலகின் வலிமையான விமானப்படைகளில் ஒன்றாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டது நம் இந்திய விமானப்படை. பாக்., ஆதரவு பயங்கரவாதிகளின் கோழைத்தனமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. நாங்கள் அரசுடன் துணை நிற்கிறோம்; எங்கள் பாதுகாப்பு படைகளுடன் நிற்கிறோம்' என, குறிப்பிட்டு இருந்தது.
ஆனாலும், பிரச்னையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் கர்நாடக காங்., பதிவிட்ட கருத்து பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.