தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அட்டவணை வெளியிட்டது கல்வித்துறை
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அட்டவணை வெளியிட்டது கல்வித்துறை
ADDED : நவ 24, 2025 01:22 AM
புதுடில்லி: தனியார் பள்ளிகளில் துவக்க நிலை வகுப்புகளுக்கு, 2026 - 20-27ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணை வெளியிட்டுள்ள அரசு, டிசம்பர் 4ம் தேதி முதல் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டில்லி அரசின் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தனியார் பள்ளிகளில் துவக்க நிலை வகுப்புகளுக்கு, 2026 - 2027ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், பின் தங்கிய பிரிவினர் மற்றும் சிறப்பு குழந்தைகள் ஆகியோரைத் தவிர, இதர பொது இடங்களுக்கான சேர்க்கை எண்ணிக்கையை நவ, 28ம் தேதிக்குள் பள்ளியின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு டிச., 4ம் தேதி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிச., 27ம் தேதிக்குள் பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப் பித்த மாணவர்களின் விவரங்களை ஜனவரி 9ம் தேதி இணையதளயத்தில் பதிவேற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண்ணை ஜனவரி 16ம் தேதிக்குள் பதி வேற்ற வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் முதல் பட்டியல், காத்திருப்புப் பட்டியலுடன், ஜனவரி 23ம் தேதி வெளியிடப் படும். ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை ஒதுக்கீடு குறித்து பெற்றோர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம்.
இரண்டாவது பட்டியல் பிப்ரவரி 9ம் தேதி வெளியி டப்படும். மாணவர் சேர்க் கை மார்ச் 19ம் தேதி நிறைவடையும்.
நர்சரி வகுப்புக்கு மூன்று வயதும், எல்.கே.ஜி.,க்கு நான்கு வயதும், ஒன்றாம் வகுப்புக்கு ஐந்து வயதும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிறைவடைந்திருக் க வேண்டும். ஒரு மாதம் வரை வயது தளர்வு வழங்க தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் உள்ளது.
மாவட்ட அளவிலான கண்காணிப்புப் பிரிவு, மாணவர் சேர் க்கை செயல்முறையை கண்காணிக்கும். கட்டணம் வசூலிப்பது, பள்ளி விவரக்குறிப்பு புத்தகத்தை வாங்க பெற்றோரை கட்டாயப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுக் கட்டணம் 25 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

