ADDED : பிப் 18, 2025 05:53 AM

சோழர்கள் கட்டிய கோவில் என்றாலே கட்டட கலைக்கு பெயர் பெற்றது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கோவில் கட்டடம் கம்பீரமாக காட்சி அளிக்கும். தமிழகத்தில் சோழர்கள் கட்டிய ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன.
அதுபோல கர்நாடகாவிலும் சோழர்கள் கைவண்ணத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் இன்னமும் கம்பீர தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. அதில் ஒரு கோவிலை பற்றி பார்க்கலாம்.
பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் அருகே உள்ளது கொண்டரஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட தர்மேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவில், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இதன் வரலாறு 5,000 ஆண்டுகள் பழமையானது. கோவில் மிக சிறியதாக இருந்தாலும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது.
புராணங்களின்படி மகாபாரதத்தின் யச காண்டம் இந்த இடத்தில் நடந்ததாக நம்பப்படுகிறது. கோவில் அருகே ஒரு குளம் உள்ளது.
இந்தக் குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றபோது நான்கு பாண்டவர் இளவரசர்கள் இந்த கோவிலில் மூழ்கி இறந்ததாகவும், தர்மராஜா, யசக்சனுக்கு சவால் விடுத்து நான்கு சகோதரர்களையும் மீண்டும் உயிர்ப்பிக்க செய்தார் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.
எத்தனையோ பேரிடர்களை கண்டாலும் கோவில் இன்னும் கம்பீரமாக காட்சியளிக்கிறது என்றும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
ஆண்டுதோறும் சிவராத்திரி, சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவில் நடை தினமும் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும்.
மெஜஸ்டிக்கில் இருந்து ஹொஸ்கோட் 32 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து கொண்டரஹள்ளி 2 கி.மீ., துாரத்தில் உள்ளது.
மெஜஸ்டிக்கில் இருந்து பி.எம்.டி.சி., பஸ் வசதி உள்ளது. சிவாஜி நகரிலிருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன
.

