sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாட்டின் வரலாறே மாறியிருக்கும்: சத்ரபதி சிவாஜிக்கு மஹா., முதல்வர் புகழாரம்

/

நாட்டின் வரலாறே மாறியிருக்கும்: சத்ரபதி சிவாஜிக்கு மஹா., முதல்வர் புகழாரம்

நாட்டின் வரலாறே மாறியிருக்கும்: சத்ரபதி சிவாஜிக்கு மஹா., முதல்வர் புகழாரம்

நாட்டின் வரலாறே மாறியிருக்கும்: சத்ரபதி சிவாஜிக்கு மஹா., முதல்வர் புகழாரம்


ADDED : பிப் 19, 2026 04:22 PM

Google News

ADDED : பிப் 19, 2026 04:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனே:'சத்ரபதி சிவாஜி மகாராஜ் மட்டும் இல்லையென்றால் இந்தியாவின் வரலாறே மாறியிருக்கும்' என்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் புகழாரம் சூட்டினார்.

1630 ஆம் ஆண்டு ஷிவ்னேரியில் பிறந்த சிவாஜி மகாராஜுக்கு 396 வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் மாநில முதல்வர் பட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, சுனேத்ரா பவார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அதை தொடர்ந்து தேவேந்திர பட்னவிஸ் பேசியதாவது:

சுயராஜ்ஜியத்தை' நிறுவியதில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் தொலைநோக்குத் தலைமையைப் பாராட்டுகிறேன், அவர் இல்லாமல் வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும்.சிவாஜி மகாராஜ் கட்டிய கோட்டைகளை யுனெஸ்கோ அங்கீகாரத்திற்கு பரிந்துரைத்துள்ளோம்,இனி பள்ளிப் பாடப்புத்தகங்களில் (சிபிஎஸ்இ) அவரது வரலாறு விரிவாக இடம்பெறும்.

கடந்த பிப்ரவரி 14 அன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல், சிவாஜி மகாராஜின் 'சுயராஜ்யம்' கொள்கையிலிருந்து திப்பு சுல்தான் ஈர்க்கப்பட்டதாகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியதில் இருவரும் இணையானவர்கள் என்றும் குறிப்பிட்டார். அது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிவாஜி மகாராஜை திப்பு சுல்தானுடன் ஒப்பிட்டுப் பேசிய காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.இவ்வாறு பட்னவிஸ் பேசினார்.






      Dinamalar
      Follow us