ADDED : ஜன 25, 2024 04:12 AM

விவேக்நகர், : வீட்டில் துாங்கிக் கொண்டு இருந்த, ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு, விவேக்நகர் மாயாபஜாரில் வசித்தவர் சதீஷ் என்கிற மிலிட்டரி சதீஷ், 30. ரவுடி. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, சதீஷ் ஒரு அறையிலும், அவரது மனைவி, குழந்தைகள் இன்னொரு அறையிலும் துாங்கிக் கொண்டு இருந்தனர்.
நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, சதீஷின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், துாங்கிக் கொண்டு இருந்த சதீஷை சுற்றிவளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு, மனைவி எழுந்து வந்தார். இதனால் மர்மநபர்கள் தப்பி ஓடினர். உயிருக்கு போராடிய சதீஷை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலன் அளிக்காமல் சதீஷ் இறந்தார். அவரை கொன்றது யார், என்ன காரணம் என்று தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக, கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில், விவேக்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.