தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வலை வளை: நவ. 23

வலை வளை: நவ. 23

வலை வளை: நவ. 23


UPDATED : நவ 23, 2026 12:00 AM

ADDED : நவ 22, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 12:00 AM ADDED : நவ 22, 2026 07:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓவைசிக்கு கிடைத்தது

ஓசியில் ஒரு மரியாதை

உ.பி., மாநிலம் சஹாரன்பூர் அரசு சுற்றுலா மாளிகைக்கு வர இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு போலீஸ் மரியாதை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; சீருடை அணிந்து, துப்பாக்கி ஏந்திய போலீசார், தயார் நிலையில் அணிவகுத்து காத்திருந்தனர். சரியாக அந்த நேரம் பார்த்து, போலீஸ் பாதுகாப்புடன் அங்கு வந்திறங்கினார், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி. ‘வருபவர் தான் உச்சநீதிமன்ற நீதிபதி’ என்று கருதிய போலீசார், அவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்; ‘தனக்குத்தான் இந்த மரியாதை போலிருக்கிறது’ என்று கருதிய ஓவைசியும், அதை ஏற்றுக்கொண்டு பதில் மரியாதை செலுத்தினார். நடந்த குழப்பம் தெளிந்த நிலையில், ஓவைசி மரியாதை ஏற்ற வீடியோ வலைதளங்களில் சிரிப்பு ‘எமோஜி’களுடன் பரவி வருகிறது.

காலணிகள் பழசு

மோசடி ரொம்ப புதுசு

பிளிப்கார்ட்டில் விற்பனை செய்த, 550 பெட்டி புதிய காலணிகளுக்குப் பதிலாக, பழைய தேய்ந்த காலணிகள் திரும்ப வந்திருப்பதாக புலம்புகிறார், ஆக்ராவைச் சேர்ந்த விற்பனையாளர். பொருள் வாங்கியவர்கள், பிடிக்காவிட்டால் குறிப்பிட்ட நாட்களுக்குள் அதை ‘ரிட்டன்’ செய்து விடும் வசதி ஆன்லைன் தளத்தில் உண்டு. அதை பயன்படுத்தி இந்த மோசடி நடந்திருப்பதாக கூறுகிறார் அவர். ‘ரிட்டன்’ அனுப்பும்போது, புதிய காலணிகளுக்கு பதிலாக, பழைய காலணியை பெட்டியில் வைத்து அனுப்பியுள்ளனர். விற்பனையாளர் அளித்த புகார்படி, மோசடியில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரிக்க ஆக்ரா போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாயின் அரவணைப்பு

மகளுக்கு நெகிழ்ச்சி

ஆஸ்ரேலியாவில் வசித்த அதிதி, 3 ஆண்டுக்குப் பின், தாயை சந்திக்க இந்தியா வந்தார். சொல்லாமல், கொள்ளாமல் தாய் வீட்டுக்கு சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மகள். அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவை திறந்த தாய், வாசலில் மகளைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் திகைத்தார். அடுத்த வினாடியே இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து பாசத்தைப் பரிமாறிக் கொண்டனர். ‘எல்லாவற்றையும் விட இந்த அணைப்பைத்தான் அதிகம் தவறவிட்டேன்’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட அதிதி, குடும்பத்தினரையும் தன் செல்லப்பிராணியையும் சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களையும் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

கனவை தள்ளி வைத்து

கடன் அடைத்த நேர்மை

டில்லி ஐ.ஐ.டி.,யில் படித்த 28 வயது யாஷ் கார்க், குடும்பத்தின், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனை அடைப்பதற்காக தன், `ஸ்டார்ட்அப்' நிறுவனம் துவங்கும் கனவை தள்ளிவைத்தது, வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. கூகுள் நிறுவனத்தில் ஆண்டுக்கு, 75 லட்சம் ரூபாய்க்கு சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர், கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்தார். பெற்றோரின் சுமையை உணர்ந்த யாஷ், இரவு நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் மொபைல் செயலிகளை உருவாக்கினார். கூகுள் ஊதியம், செயலிகள் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு, மொத்த கடனையும் அடைத்தார். இப்போது அவர் கூகுள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த தொழில் செய்து வருகிறார்; அவரது முயற்சி, வலைதளவாசிகளின் பாராட்டை பெற்றுள்ளது.

பாதை மாறிய பயணம்

பாடம் புகட்டினர் பெண்கள்

சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தால், நடைபாதையில் வாகனத்தை செலுத்துவது பைக் ஓட்டிகள் பலருக்கும் வாடிக்கையாகி விட்டது. அப்படி டில்லி நடைபாதையில் வாகனத்தை செலுத்தியவர்களுக்கு வழிவிட மறுத்த, 3 பெண்களின் வீடியோ, எக்ஸ் தளத்தில் கவனம் பெற்றுள்ளது. மரங்கள் நிறைந்த நடைபாதையில் அந்த பெண்கள் நடந்து செல்கின்றனர்; பின்னால் வந்த இரு பைக் ஓட்டிகள், வழிவிடும்படி கூறி தொடர்ந்து ஹாரன் அடித்தனர். அதை பொருட்படுத்தாத அந்த பெண்கள் வழிவிடாமல் தொடர்ந்து நடந்தனர். ‘விதி மீறிய பைக் ஓட்டிகளுக்கு 3 பெண்களும் தகுந்த பாடம் கற்பித்தனர்’ என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோ, வலைதளவாசிகளின் பாராட்டை பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us