ADDED : நவ 22, 2026 07:26 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இ.சி.ஆர்., சாலையில் ரோந்து சென்றபோது, அங்குள்ள தனியார் பார் அருகே குடிபோதையில் ரகளை செய்த முத்தியால்பேட்டை வெங்கடேஷ்,40, என்பவரை கைது செய்தனர்.
சேதராப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் பிப்டிக் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து சென்றபோது, ரகளை செய்த கரசானுார் கிருஷ்ணராஜ்,40; என்பவரை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ஐ.டி.ஐ., சாலையில் ரோந்து சென்றபோது, சுடுகாடு எதிரே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட முத்திரைப்பாளையம் கணேஷ்,38, என்பவரை கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, குண்டுசாலை தனியார் பார் அருகில் மதுபோதையில் தகராறு செய்த மூலகுளம் ராஜ்குமார்,39, என்பவரை கைது செய்தனர்.
அதேபோல், மூலகுளம் தனியார் கார் ேஷாரூம் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த வேளப்பாக்கம் சஞ்சய்,44, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை போலீசார் குருசுக்குப்பம் பகுதியில் ரோந்து சென்றபோது, அவுக்கா சின்னதம்பி வீதியில் குடிபோதையில் ரகளை செய்த முத்தியால்பேட்டை அலெக்ஸ்,24, என்பவரை கைது செய்தனர்.
காலாப்பட்டு போலீசார் பிம்ஸ் மருத்துமனை சாலையில் ரோந்து சென்றபோது, பொது இடத்தில் ரகளை செய்த மரக்காணம் நடுக்குப்பம் வினோத்,30; என்பவரை கைது செய்தனர்.
உருளையன்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் நடேசன் நகர் பகுதியில் ரோந்து சென்றபோது, நுாறடிசாலை தனியார் பார் எதிரில் மதுபோதையில் ரகளை செய்த முத்தியால்பேட்டை உதயகுமார்,45, என்பவரை கைது செய்தனர்.
வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் மூர்த்தி நகர் பகுதியில் ரோந்து சென்றபோது, குடிபோதையில் ரகளை செய்த வளவனுார் சஞ்சய்,23; என்பவரை கைது செய்தனர்.
முதலியார்பேட்டை போலீசார் நுாறடி சாலையில் ரோந்து சென்றபோது, தனியார் பார் அருகில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நைனார்மண்டபம் ராமு,55; என்பவரை கைது செய்தனர்.
அதேபோல், ரயில்டிராக் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த முதலியார்பேட்டை ராஜேஷ்,36 என்பவரை கைது செய்தனர்.
ஏனாம் போலீசார் நேற்று முன்தினம் பைபாசில் ரோந்து சென்றபோது, தனியார் பார் அருகில் குடிபோதையில் ரகளை செய்த சர்பவரம் ராயுடுசிவா, 28; என்பவரை கைது செய்தனர்.
