தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தவிப்பு

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தவிப்பு

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தவிப்பு


ADDED : நவ 22, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் இன்னும் அமலுக்கு வராததால் புதுச்சேரி ஓய்வூதியர்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான கோப்புக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, விரைவில் கணக்கு மற்றும் கருவூலத் துறை மூலம் கவர்னரின் அனுமதி பெற்று, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்களிடம் புதிய திட்டத்தில் இணைவதற்கான விருப்பத் தேர்வு பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தது, ஒரு பக்கம் இருந்தாலும், நாங்கள் ஏற்கனவே அனுமதி தந்தும் கூட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் இதுவரை நடைமுறைக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக ஓய்வூதியரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து ஓய்வூதியர்கள் கூறியதாவது:

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், அரசு ஊழியர்களின் நீண்டகால ஓய்வூதியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். தேசிய ஓய்வூதியத் திட்டமான என்.பி.எஸ்., திட்டத்தின் சிறப்பம்சங்களையும், பழைய ஓய்வூதியத் திட்டமான ஓ.பி.எஸ்., திட்டத்தின் உறுதியான பலன்களையும் இணைத்து இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், புதுச்சேரியில் இதனைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன. மத்திய அரசு கடந்த ஏப்ரல் 2025-ல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி, 2004-ம் ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்புவோரிடம் 2025 நவம்பர் வரை விருப்பம் பெறப்பட்டது. இதையடுத்து, என்.பி.எஸ்., திட்டத்தில் இருந்த அரசு ஊழியர்கள் யு.பி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்டனர்.

ஆனால், புதுச்சேரியில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கோப்புக்கு கடந்த ஆகஸ்ட் மாதமே மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தும், இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதனால், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் பலரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

சிலர் வேறு வழியின்றி மீண்டும் என்.பி.எஸ்., திட்டத்தின்கீழ் ஓய்வூதியப் பலன்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையலாம் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியர்கள் 18 மாதங்களுக்கும் மேலாகக் காத்திருக்கின்றனர்.

எனவே, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு, நிலவும் தாமதத்துக்குத் தீர்வு காண வேண்டும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நீண்டகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us