தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வலை வளை: நவ. 24

வலை வளை: நவ. 24

வலை வளை: நவ. 24


UPDATED : நவ 24, 2026 12:00 AM

ADDED : நவ 23, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 12:00 AM ADDED : நவ 23, 2026 07:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கை பம்பில் சாராயம்;

என்ன ஒரு வில்லத்தனம்?

உ.பி., மாநிலம் ஜான்ஸியில் கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற போலீசாருக்கு, ஒரு வீட்டின் பின்புறம் இருந்த கை பம்பு மீது சந்தேகம் ஏற்பட்டது. வழக்கமாக, வீடுகளில், தண்ணீர் தொட்டிகள், சிறிய கிணறுகளில் நிறுவக்கூடிய கைபம்பு அது.

அதை போலீசார் இயக்கியபோது, குழாயில் தண்ணீர் வரவில்லை; கள்ளச்சாராயம் வந்தது. வீட்டுக்கு அடியில் நிலவறை கட்டி, கள்ளச்சாராயத்தை தேக்கிய குடும்பத்தினர், கை பம்பில் மேலே எடுத்து விற்பனை செய்வது தெரியவந்தது. வீட்டு உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டார். கை பம்பில் கள்ளச்சாராயம் வரும் வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது.

யானை சிற்பத்தில்

சிக்கினார் பக்தர்

ம.பி., மாநிலம் அமர்கண்டக் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், அங்குள்ள சிறிய யானை சிற்பத்தின் கால்களுக்கு அடியில் புகுந்து வெளியேறி நேர்த்திக்கடன் செலுத்துவர். அப்படி யானை சிற்பத்தின் கால்களுக்கு அடியில் புகுந்த பக்தர் ஒருவர், நகர முடியாமல் சிக்கிய வீடியோ வலைதளங்களில் பரவுகிறது.

இடுப்பு பகுதி, யானை சிற்பத்தின் கால்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டதால் அவரால் முன்னாலும் வர முடியவில்லை; பின்னாலும் போக முடியவில்லை. பக்தர்கள் அவருக்கு பல வகையிலும் உதவினர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு, அவர் வெளியே வந்தார். அங்கிருந்த பக்தர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

மகளுக்கு சிரமம் தவிர்க்க

‘காரியம்’ செய்த முதியவர்

உ.பி., மாநிலம் பாஹ்பத் மாவட்டம், ஜோஹ்ரி கிராமத்தை சேர்ந்த, 80 வயது பல்ஜோர் சிங், தன் கருமாதி சடங்கை உயிருடன் இருக்கும்போதே நடத்தினார். இது, ஒருவர் இறந்த 13-ம் நாள் நடத்தப்படும் சடங்கு.

‘எனக்கு மகன் இல்லை; என் மரணத்துக்குப் பிறகு இந்தப் பொறுப்புகள், மகளுக்குச் சுமையாக இருக்கக்கூடாது’ என்றார், அவர். நிகழ்ச்சியில், உறவினர்கள், நண்பர்கள் என 900 பேருக்கு விருந்து அளிக்கப்பட்டது. குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பதன் அடையாளமாக, 10 வயதுப் பேரன் முகுலுக்குத் தலைப்பாகை அணிவித்தார் பல்ஜோர். மகள் மீதான முதியவரின் அன்பை வலைதளவாசிகள் பாராட்டினர்.

சிறந்த சீன உளவாளி

அமெரிக்காவில் போட்டி

‘என்விடியா’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜென்சன், சீன பெண் உளவாளியுடன் காதலில் இருந்த விவகாரம், அமெரிக்காவில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. சீன உளவாளி போன்ற தோற்றம் கொண்டவர்களுக்கான வினோதப் போட்டி வாஷிங்டன் நகரில் நடத்தப்பட்டது.

பங்கேற்பாளர்கள் உளவாளிகளைப் போல வேடமிட்டு, ரகசிய ஆவணங்களைத் திருடுவது போன்ற சாகசங்களில் ஈடுபட்டனர். ஜென்சன் ஹுவாங் வேடமிட்டும் ஒருவர் பங்கேற்றார். போட்டி வீடியோக்கள் இணையத்தில் பரவிய நிலையில், பலரும் அதை ரசித்தனர்; ‘சர்ச்சைக்குரிய விவகாரத்தை பொழுதுபோக்காக மாற்றுவது தவறு’ என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

வலைதளங்களில் பரவியது

‘பல்லி மனிதர்’ வீடியோ

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் மம்தானி, மாநகரின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து உரையாற்றினார். அப்போது அவருக்குப் பின் நின்றிருந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோர்டன் ரைட், கண்களை உருட்டி விசித்திரமான முகபாவனைகளை வெளிப்படுத்தினார்.

வீடியோ பரவிய நிலையில், வலைதளவாசிகள் பதிவிட்ட கமென்ட்கள் குபீர் சிரிப்பை ஏற்படுத்துவதாக இருந்தன. ‘மனிதர்களைப் போல வேடமிட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வேற்றுக்கிரகவாசி’ என்றும், ‘நமக்குள் வசிக்கும் பல்லி மனிதர்கள்’ என்றும், பதிவுகளை வெளியிட்டனர். டிரம்ப் ஆதரவாளர்கள் தான் இப்படி கமென்ட் செய்வதாக, இன்னொரு தரப்பினர் புகார் கூறுகின்றனர்.

ரிஷிகேஷ் கங்கை கரையை

சுத்தம் செய்த வெளிநாட்டினர்

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியர் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது. கைகளில் கையுறைகள் அணிந்து, குப்பைப் பைகளுடன் வந்த பெண்கள், ஆற்றங்கரையில் சிதறிக் கிடந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றினர்.

இதைப் பார்த்த ஒருவர், ‘நம் நாட்டின் பாரம்பரிய இடங்களைப் பாதுகாக்க வெளிநாட்டினர் முன்வரும் நிலையில், உள்ளூர்வாசிகள் ஏன் குப்பைகளைக் கொட்டி அசுத்தப்படுத்துகின்றனர்’ எனக் கேள்வி எழுப்பினார். சுற்றுலாப் பயணியரின் இந்தச் செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us