தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வலை வளை: நவ. 6

வலை வளை: நவ. 6

வலை வளை: நவ. 6


ADDED : நவ 06, 2026 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 12:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொது ஊழியரை சந்திக்க

அப்பாயின்மென்ட் வேண்டுமோ?

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் கூட்டம் நடக்கிறது. திடீரென உள்ளே புகுந்த ஒருவர், ‘உங்களுடன் பேச வேண்டும்’ என்று அதிகாரியிடம் கூறுகிறார். ‘அப்பாயின்மென்ட் வாங்கினீர்களா’ என்று கேட்கிறார், அந்த அதிகாரி. வந்தவரோ, ‘எதற்கு அப்பாயின்மென்ட், நீங்கள் ஒரு பொது ஊழியர். தனியார் நிறுவனத்தின் எச்.ஆர்., அதிகாரி கிடையாது’ என்று மல்லுக்கட்டுகிறார்.

இப்படி கூறியவர், நாக்பூரை சேர்ந்த ஜன் பத்லாவ் கட்சியின் தலைவர் யாஷ் கவுர்கடே. வீடியோவை வெளியிட்ட அவர், ‘பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் சேர்ந்து ஊழியர்களை துன்புறுத்துகின்றனர். அதை கேட்கவே நான் சென்றேன்’ என்கிறார். வீடியோவை பார்த்த வலைதள பிரியர்கள், ‘அப்பாயின்மென்ட் இருக்கிறதா’ என்று கேட்ட அதிகாரியை வறுத்தெடுக்கின்றனர்.

உணர்வு ததும்பும் குரலில்

உருக வைத்த ம.பி., தம்பதி

ம.பி., மாநிலம் இந்துாரில் பார்வையற்ற தம்பதி, சாலையோரம் நின்றபடி சினிமா பாடல் பாடும் வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. அவர்கள் பாடுவதை கேட்பார் யாருமில்லை. எனினும், அவர்கள் பாடிக் கொண்டே இருக்கின்றனர். ‘போர்ட்டபிள் ஸ்பீக்கர், மைக்’ வைத்துக் கொண்டு, ‘தில்வாலே’ பட பாடலை மிக உருக்கமாக பாடுகிறார் அவர். தம்பதியுடன் சிறுமியான அவர்களது மகளும் நின்று கொண்டிருக்கிறார்.

வீடியோவை பகிர்ந்த ரமேஷ், ‘இத்தகைய திறமையாளர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது. வலைதளத்தில் இந்த வீடியோவை பார்ப்பவர்கள், பலருக்கும் பகிர்ந்து வாய்ப்பு ஏற்படுத்த உதவுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சண்டையிடும் தம்பதிகள்

சமாதானம் ஆகும் வழி இதோ!

தொழில்முனைவோரான அங்குர் வாரிகூவும், மனைவி ருசியும், சண்டை வந்தால் சமாதானம் ஆவதற்காக, தாங்கள் பின்பற்றும் 3 அணுகுமுறைகளை, ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்துள்ளனர். முதலாவது, மற்றவர்கள் முன், குறிப்பாகக் குழந்தைகள் முன், வாதிடாமல் தனிமையில் மட்டுமே பேசுவது. இரண்டாவது, சண்டையைத் தீர்க்காமல் துாங்கச் செல்லக்கூடாது; இதை உறுதியாக பின்பற்றினால் போதும். மூன்றாவது, யார் சரி, யார் தவறு என்று பார்க்காமல், பிரச்னையில் கவனம் செலுத்துவது; ‘நாங்கள் போராடுவது பிரச்னையுடன், ஒருவருக்கொருவர் எதிராக அல்ல’ என்றனர். தம்பதியின் அறிவுரை, வலைதள பிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

உடல் நலம் குன்றியபோதும்

உறுதி குலையாத ஸ்வாதி பார்கவா

‘கேஷ்கரோ, எர்ன்கரோ’ இணை நிறுவனர் ஸ்வாதி பார்கவா, ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்த வீடியோவில், கணவர் ரோஹனுடன் பிரிட்டனில் தொழில் தொடங்கிய பயணத்தை விவரித்தார். சிறுநீரகச் செயல்பாடு வெறும் 3- முதல் 4 சதவீதமாகக் குறைந்தபோதும் தொடர்ந்து பணியாற்றியதாக சொல்கிறார், ஸ்வாதி. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதலாண்டு படிக்கும்போதே, அவருக்குச் சிறுநீரகப் பிரச்னை கண்டறியப்பட்டது.

மாற்று அறுவை சிகிச்சைக்குச் சற்று முன், 130 கோடி ரூபாய் நிதி சேகரிப்பை வெற்றிகரமாக முடித்தார். சிறுநீரக செயல்பாடு, 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த நிலையிலும், நாள் முழுதும் வேலை பார்த்ததாக தெரிவித்துள்ளார் ஸ்வாதி. உடல் நலம் குன்றிய நிலையிலும், அவரது உறுதியை கண்ட வலைதளவாசிகள், பாராட்டி வருகின்றனர்..........

இப்படியும் ஒரு அபகரிப்பு

குடியிருப்போர் மோதல்

வேலைக்காரரை அபகரித்துக் கொண்டது தொடர்பாக, பெங்களூரு குடியிருப்போர் சங்க, ‘வாட்ஸாப்’ குழுவில் நடந்த விவாதம், வலைதளங்களில் பரவி வருகிறது. விவாதத்தை, ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்த ஒருவர், ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்து விட்டார்.

‘காலை 9 முதல் மாலை 6 மணி வரைக்கும் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் என சற்று கூடுதலாகக் கொடுத்து, மற்றவர்களின் பணியாளர்களை அபகரிப்பது வெறுப்பூட்டுகிறது. சம்பளம் பேசலாம்; அடிப்படை நாகரிகம் வேண்டும்’ என்பது ஒருவரது புகார். அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் பணியாளரை, இன்னொரு வீட்டுக்காரர் கூடுதல் சம்பளம் பேசி அழைத்துச் சென்று விட்டார் என்பதில் அவருக்கு ரொம்பவும் வருத்தம். இதைக்கண்ட வலைதள பிரியர் ஒருவர், ‘இது சுதந்திரச் சந்தை; ஆயாக்கள் நீடித்திருக்க விரும்பினால் நல்ல சம்பளமும் மரியாதையும் தாருங்கள்’ என்றார். பலரும் அவருக்கு ஆதரவாக பதிவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us