ADDED : பிப் 10, 2024 12:59 AM
புதுடில்லி:வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்
வடகிழக்கு டில்லி ஜாப்ராபாத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை ஒருவர், கடந்த 2ம் தேதி அதிகாலையில் உடைக்க முயற்சித்தார்.
இந்தக் காட்சியை அந்த வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் பார்த்தனர். இதுகுறித்து டில்லி மாநகரப் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த ஜாப்ராபாத் போலீசார் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த வாலிபரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
விசாரணையில், மவுஜ்பூரை சேர்ந்த அப்துல்லா, 28, என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து இரண்டு ஸ்குரூ டிரைவர்கள் மற்றும் கொத்துச்சாவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.