ADDED : ஆக 29, 2025 12:49 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கில் முகலாயர் கால ஜும்மா மசூதி உள்ளது. ஹிந்து கோவிலை இடித்து விட்டு, இந்த மசூதியை கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது .
இதையடுத்து, இந்த மசூதியில் ஆய்வு நடத்த கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, அங்கு ஹிந்து - முஸ்லிம்கள் இடையே மோதல் ஏற்பட்டு இனக்கலவரமாக மாறியது.
கடந்த ஆண்டு நடந்த இனக்கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழு தாக்கல் செய்த அறிக்கை:
சம்பல் பள்ளத்தாக்கில் பதான்கள் எனப்படும் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்கும், துருக்கியில் இருந்து வந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது .
கடந்த 1947ம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது, 47 சதவீதமாக இருந்த ஹிந்துக்கள் எண்ணிக்கை தற்போது 15 முதல் 20 சதவீதமாக குறைந்துள்ளது. தற்போது சம்பல் பகுதியில் 85 சதவீத முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.