ADDED : மார் 30, 2025 11:15 PM

மத்தியிலும், பீஹாரிலும் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றன. கால்நடைகளுக்கான தீவனத்தைத் தின்றவர்களால் மாநில மக்களின் நலனைப் பற்றி சிந்திக்க முடியாது. லாலு பிரசாத் தன் குடும்ப வளர்ச்சிக்கு மட்டும் பாடுபட்டவர்.
அமித் ஷா, மத்திய அமைச்சர், பா.ஜ.,
அர்த்தமற்ற பேச்சு வேண்டாம்!
சாலைகளில் முஸ்லிம்கள் தொழுகை செய்வது பற்றி என்னிடம் கேட்கிறீர்கள். இது போன்ற கேள்விகளால் எந்த பயனாவது உண்டா? இவை அர்த்தமற்ற பேச்சுக்கள். இது போன்ற பேச்சு சமூகத்திலும், நாட்டிலும் பதற்றத்தை உருவாக்கும். நாட்டில் விவாதிக்க வேண்டிய பிரச்னைகள் எத்தனையோ உள்ளன.
சிராக் பஸ்வான், மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி ராம்விலாஸ் அணி
தவறு செய்ய மாட்டேன்!
பா.ஜ., கூட்டணியில் இருந்து இனி விலக மாட்டேன். இரண்டு முறை அந்த தவறை செய்து விட்டேன்; இனிமேல் அதை செய்ய மாட்டேன். பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி, மக்களுக்கு என்ன செய்தது. முஸ்லிம்களின் ஓட்டுகளை பெற்ற அவர்கள், மதங்களுக்கு இடையேயான மோதல்களை தடுக்கவில்லை.
நிதிஷ் குமார், பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்