sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேசியவாத காங்கிரஸ் இணைப்பு விவகாரத்தில் தொடர்ந்து நீடிக்கும் இழுபறி: மனம் திறந்தார் சரத் பவார்

/

தேசியவாத காங்கிரஸ் இணைப்பு விவகாரத்தில் தொடர்ந்து நீடிக்கும் இழுபறி: மனம் திறந்தார் சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் இணைப்பு விவகாரத்தில் தொடர்ந்து நீடிக்கும் இழுபறி: மனம் திறந்தார் சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் இணைப்பு விவகாரத்தில் தொடர்ந்து நீடிக்கும் இழுபறி: மனம் திறந்தார் சரத் பவார்


ADDED : பிப் 04, 2026 04:58 PM

Google News

ADDED : பிப் 04, 2026 04:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக சுனேத்ரா பவார் நியமிக்கப்பட்டதற்கு சரத் பவார் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இது குறித்து நிருபர்களிடம் சரத் பவார் கூறியதாவது: பாராமதியில் பவார் குடும்பத்தினரால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனமான வித்யா பிரதிஷ்டான் வளாகத்தில் அஜித் பவாருக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அஜித் பவாருக்குப் பதிலாக மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்வராக நியமிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவினரையும் இணைப்பது குறித்து அஜீத் பவாருக்கும் ஜெயந்த் பாட்டிலுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அந்தப் பேச்சுவார்த்தைகளில் முதல்வர் பட்னவிஸ் ஈடுபடவில்லை. அப்படியிருக்கையில், இணைவு பற்றிப் பேச அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணைவது குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கும் தேவேந்திர பட்னவிஸுக்கோ அல்லது பாஜவிற்கோ எந்த தொடர்பும் கிடையாது. தேசியவாத காங்கிரஸ் எந்த முடிவையும் சொந்தமாக எடுக்கும். தற்போது துயரத்தில் இருப்பதால் எந்த விதமான அரசியல் முடிவுகள் குறித்தும் விவாதங்கள் நடைபெறவில்லை. இவ்வாறு சரத் பவார் கூறினார்.






      Dinamalar
      Follow us