ADDED : டிச 14, 2024 08:35 PM

புதுடில்லி: லோக்சபாவில் பிரதமர் மோடி புதிதாக எதையும் பேசவில்லை, '' என வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா குறித்த சிறப்பு விவாதம் லோக்சபாவில் நேற்று துவங்கியது. இந்த விவாதத்தில் பிரதமர் மோடி, இன்று மாலை பேசினார். அப்போது காங்கிரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இது தொடர்பாக வயநாடு தொகுதி எம்.பி.,யான காங்கிரசைச் சேர்ந்த பிரியங்கா கூறியதாவது: லோக்சபாவில் பிரதமர் மோடி புதிதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பேசவில்லை. அவரது பேச்சு சலிப்பை ஏற்படுத்தியது. அவர் புதிதாக ஏதாவது பேசுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், 11 வெற்று வாக்குறுதிகள் பற்றி தான் அவர் பேசினார். ஊழலை அவர் பொறுத்துக் கொள்ள முடியாது என்றால், அதானி குறித்து அவர் விவாதமாவது நடத்தியிருக்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா கூறினார்.