ADDED : செப் 10, 2025 11:51 PM

ஓட்டுத் திருடர்கள் பதவி விலக வேண்டும் என்ற எங்களின் முழக்கம் நாடு முழுதும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த முழக்கத்தை, மக்கள் மத்தியில் கொண்டு சென்று மீண்டும், மீண்டும் நிரூபிப்பதே எங்கள் நோக்கம்.
ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,
நேர்மாறாக நடந்தது
துணை ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓட்டுகளை எதிர்க்கட்சியினர் பிரிக்க முயன்றனர். ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்தது. தங்கள் சொந்த ஓட்டுகளையே அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
தேவேந்திர பட்னவிஸ் மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,
ஏற்க வேண்டும்
ராஜ்யசபா தலைவராக பணியாற்றும் புதிய துணை ஜனாதிபதி, எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகள் மற்றும் அறிவிப்புகளை ஏற்க வேண்டும். அவற்றை தணிக்கை செய்யக் கூடாது. மசோதாக்கள் ஆய்வுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்.
டெரிக் ஓ பிரையன் ராஜ்யசபா எம்.பி., திரிணமுல் காங்.,