ADDED : டிச 12, 2025 12:55 AM

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும், ஹிந்துக்கள் மீது மதரீதியான தாக்குதல் நடக்கிறது. எல்லோரும் ஹிந்துக்களையே குறி வைக்கின்றனர். இதனால், அவர்களின் மரபுகள் கேள்விக்குறியாகின்றன. தங்கள் பழக்கவழக்கங்கள் தாக்கப்படும்போது, எதிர்ப்பை காட்ட வேண்டியது ஒவ்வொரு ஹிந்துவின் பொறுப்பு. அனைவருக்கும் நீதி ஒன்றுதான்.
- பவன் கல்யாண், ஆந்திர துணை முதல்வர், ஜனசேனா
பெண்களை ஏமாற்றுபவர்கள்!
பெண்களை ஏமாற்றுபவர்களும், வக்கிரக்காரர்களும் காங்கிரசில் உள்ளனர். தவறையும் செய்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். கட்சியில் பொறுப்பில் இருக்கும் அவர்கள், இதுபோன்ற நடத்தையில் ஈடுபடலாமா? குற்றத்தில் ஈடுபட்டதுடன், தங்களை நல்லவர் போல் அவர்கள் காட்டிக்கொள்கின்றனர்.
- பினராயி விஜயன், கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ.,
6,700 பேர் மீட்பு!
கம்போடியா, மியான்மர், லாவோ உள்ளிட்ட நாடுகளில், மோசடி நிறுவனங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த, 6,700 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். போலி விளம்பரம் வாயிலாக ஈர்க்கப்பட்டு வெளிநாடு சென்று, மோசடி கும்பலிடம் சிக்கியுள்ள பிற இந்தியர்களையும் மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
- கீர்த்தி வர்தன் சிங், மத்திய அமைச்சர், பா.ஜ.,

