தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பஞ்சாப் சட்டசபையின் பிப்., தேர்தலுக்கு வேட்பாளர் அறிவிப்பு துவக்கம் : ஆம் ஆத்மியில் முதல்வர் மான், சிறைக் கைதிக்கு 'சீட்'

பஞ்சாப் சட்டசபையின் பிப்., தேர்தலுக்கு வேட்பாளர் அறிவிப்பு துவக்கம் : ஆம் ஆத்மியில் முதல்வர் மான், சிறைக் கைதிக்கு 'சீட்'

பஞ்சாப் சட்டசபையின் பிப்., தேர்தலுக்கு வேட்பாளர் அறிவிப்பு துவக்கம் : ஆம் ஆத்மியில் முதல்வர் மான், சிறைக் கைதிக்கு 'சீட்'

1


UPDATED : அக் 31, 2026 11:54 PM

ADDED : அக் 31, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

1

UPDATED : அக் 31, 2026 11:54 PM ADDED : அக் 31, 2026 09:11 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சண்டிகர்: பஞ்சாபில், அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 40 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, ஆளும் ஆம் ஆத்மி கட்சி இன்று (அக்.,31) வெளியிட்டது. இதன்படி, துரி தொகுதியில் முதல்வர் பகவந்த் சிங் மான் மீண்டும் போட்டியிடுகிறார். பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சஞ்சீவ் அரோராவுக்கும், ஆம் ஆத்மி மேலிடம், 'சீட்' வழங்கி உள்ளது. கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ள பா.ஜ., - சிரோமணி அகாலி தளம் இடையே, தொகுதி பங்கீடு பேச்சு தொடங்கியது.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 117 சட்டசபை தொகுதிகளுக்கு, 2027 பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

கடந்த சட்டசபை தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்று, பஞ்சாபில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, இந்த முறை இரண்டாவது வெற்றியை எதிர்நோக்கி உள்ளது. ஆட்சியை பறிகொடுத்த காங்., மீண்டும் அதை கைப்பற்றும் நோக்கில் பணியாற்றி வருகிறது. மேற்கு வங்கத்தை போல பஞ்சாபிலும் வெற்றி கணக்கை தொடங்க பா.ஜ.,வும் முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும், 40 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆளும் ஆம் ஆத்மி இன்று வெளியிட்டது. இதில் பெரும்பாலானவர்கள், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் ஆவர். இதன்படி, சங்கரூர் மாவட்டத்தின் துரி சட்டசபை தொகுதியில், முதல்வர் பகவந்த் சிங் மான் மீண்டும் போட்டியிடுகிறார். ஆம் ஆத்மியின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில், கடந்த சட்டசபை தேர்தலில், 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் அபார வெற்றி பெற்றார்.

அதே போல, பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சஞ்சீவ் அரோரா, லுாதியானா மேற்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மீதமுள்ள, 77 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அடுத்தடுத்த பட்டியல்களில் அறிவிக்கப்படும் என, ஆம் ஆத்மி மேலிடம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, காலிஸ்தான் ஆதரவாளரும், கடூர் சாஹிப் தொகுதி எம்.பி.,யுமான அம்ரித்பால் சிங், சட்டசபை தேர்தலில் துரி தொகுதியில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொகுதி பங்கீடு பேச்சு தீவிரம்


பஞ்சாபில், பா.ஜ.,வுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்த முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம், வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2020ல், கூட்டணியை முறித்தது. ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது பா.ஜ.,வுடன் அக்கட்சி மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலை ஒன்றாக சந்திக்க இக்கூட்டணி முடிவு செய்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக, பா.ஜ., - சிரோமணி அகாலி தளம் இடையே நீண்ட பேச்சு நடக்கிறது. இதில், இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையே, மொத்தமுள்ள, 117 சட்டசபை தொகுதிகளில், சிரோமணி அகாலி தளம், 60; பா.ஜ., 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Image 1638766

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us