UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 09:06 PM
அ நிறம் | அளவு
தங்கவயல்: தங்கவயல் நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
தங்கவயல் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பூங்காவில் அமைந்துள்ள இந்திரா சிலைக்கு, தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா மாலை அணிவித்தார்.
நகர மேம்பாட்டு குழும தலைவர் பி.சீனிவாசன், முன்னாள் தலைவர் எம்.சம்பத்குமார், நகராட்சி முன்னாள் தலைவர் இந்திரா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் மதலைமுத்து, பொதுச்செயலர் டி.பிரபாகரன் பாபு, துணைத்தலைவர்கள் டேவிட், சார்லஸ், மோகன் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
