UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 09:54 PM

பெங்களூரு: பெங்களூரு நாகரபாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிறுநீரகம் தேவைப்பட்டது.
கோலாரில் உள்ள ஜாலப்பா மருத்துவமனையில் இருந்து மருத்துவ உபகரண பெட்டியில் வைத்து, சிறுநீரகம் ஆம்புலன்ஸ் மூலம், பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கே.ஆர்.புரம் பகுதியில் ஆம்புலன்ஸ் வந்த போது, அவசரமாக சிறுநீரகம் தேவைப்பட்டதால், மருத்துவ குழுவினர் மெட்ரோவில் பயணிக்க முடிவு செய்தனர்.
பென்னிகானஹள்ளியில் மெட்ரோ ரயிலில் ஏறி, 37 நிமிடத்தில் அத்திகுப்பே மெட்ரோ ரயில் நிலையம் சென்றனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் உரிய நேரத்தில் சிறுநீரகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பென்னிகானஹள்ளியில் இருந்து அத்திகுப்பே 19 கி.மீ., துாரம் உள்ளது. சாலை மார்க்கமாக சென்றால் ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் ஆகும். ஆனால், மெட்ரோவில் 37 நிமிடங்களில் சென்று விடலாம்.
