தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்களூரு – துாத்துக்குடி தீபாவளி சிறப்பு ரயில்

பெங்களூரு – துாத்துக்குடி தீபாவளி சிறப்பு ரயில்

பெங்களூரு – துாத்துக்குடி தீபாவளி சிறப்பு ரயில்


UPDATED : நவ 01, 2026 12:00 AM

ADDED : அக் 31, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 12:00 AM ADDED : அக் 31, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘பயணியர் வசதிக்காக தீபாவளிக்கு பெங்களூரில் இருந்து துாத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன’ என, தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

 ரயில் எண் 06533: பெங்களூரு கன்டோன்மென்ட் – துாத்துக்குடி சிறப்பு ரயில், பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து நவ., 6ம் தேதி இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:30 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் எண் 0653 4: துாத்துக்குடி -– பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரயில், துாத்துக்குடியில் இருந்து நவ., 7 ம் தேதி மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

இந்த ரயில், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி வழியாக துாத்துக்குடி சென்றடையும்.

 ரயில் எண் 06545: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு – கண்ணுார் – பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரயில், எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து நவ., 7ம் தேதி அதிகாலை 12:05 மணிக்கு புறப்பட்டு, அன்று மதியம் 2:00 மணிக்கு கன்னுார் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் 06546: கன்னுார் – பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரயில், கண்ணுாரில் இருந்து நவ., 7 ம் தேதி மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:45 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தடையும்.

இந்த ரயில், ஒயிட்பீல்டு, பங்கார்பேட்டை, பாலக்காடு, சோரனுார், திரூர், கோழிக்கோடு, வடகரா, தளசேரி வழியாக கண்ணுார் சென்றடையும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us