மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடூரம் மேற்கு வங்கத்தில் தொடரும் அவலம்
மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடூரம் மேற்கு வங்கத்தில் தொடரும் அவலம்
ADDED : அக் 11, 2025 11:57 PM
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், மருத்துவ கல்லுாரி மாணவியை கடத்திச் சென்று மர்ம நபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில், பச்சிம் வர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லுாரி இயங்கி வருகிறது.
கண்காணிப்பு கேமரா இங்கு, ஒடிஷாவின் ஜல்லேஸ்வரைச் சேர்ந்த மாணவி, இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார். இவர், தன் ஆண் நண்பருடன் நேற்று முன்தினம் இரவு உணவருந்தி விட்டு, விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த மூன்று பேர், அந்த மாணவியின், 'மொபைல் போனை' பறித்ததுடன், 3,000 ரூபாய் தந்தால் மொபைல் போனை தருவதாக கூறினர்.
இதையடுத்து, பணத்தை எடுத்து வர மாணவியின் நண்பர் சென்ற நிலையில், மருத்துவ கல்லுாரி அருகே உள்ள வனப்பகுதிக்கு மாணவியை இழுத்து சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடினர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட் ட மாணவியின் நிலையை அறிந்த அவரது நண்பர், உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
தகவலறிந்து வந்த மாணவியின் பெற்றோர், இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
இதன்படி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மருத்துவ கல்லுாரி அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தப்பியோடிய மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கூறுகையில், 'எங்கள் மகள், பல்வேறு கனவுகளுடன் இக்கல்லுாரியில் மருத்துவம் படிக்க வந்தார்.
உரிய பாதுகாப்பு 'ஆனால், தற்போது இச்சம்பவத்தால் நாங்கள் நிலைகுலைந்து போய் உள்ளோம். நல்ல கல்லுாரி என்ற அடிப்படையில் இங்கு தங்கி படிக்க அனுமதித்தோம். ஆனால், இங்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பதை இச்சம்பவம் எங்களுக்கு உணர்த்தியுள்ளது.
'இ துபோன்ற நிலை, வேறு எந்த பெண்ணிற்கும் நிகழக்கூடாது. இந்த விவகாரத்தில் எங்களுக்கு உரிய நீதி வே ண்டும்' என்றனர்.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் சார்பில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையத்தின் உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார் கூறுகையில், “மேற்கு வங்கத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
''தற்போது, மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற வழக்குகளில் மேற்கு வங்க போலீசார் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். எ னவே, இதுபோன்ற குற்றங்களை தடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
அதிர்ச்சி இதற்கிடையே, மாணவிக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாநில சுகாதாரத்துறை உத்தர விட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரியில், கடந்த ஆண்டு பயிற்சி டாக்டரை, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில், மற்றொரு மருத்துவ கல்லுாரி மாணவி, கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.