தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/‘ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் செயல்திறனை இழந்துவிட்டது’

‘ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் செயல்திறனை இழந்துவிட்டது’

‘ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் செயல்திறனை இழந்துவிட்டது’

2


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 10:44 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ‘சர்வதேச விவகாரங்களில் பல முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தன் செயல்திறனை இழந்து வருகிறது. அது, உலக நாடுகளின் ஒட்டுமொத்த நலனை பிரதிபலிக்கவில்லை’ என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

டில்லியில் நடந்த கவுடில்யா பொருளாதார மாநாட்டில், சர்வதேச விவகாரங்கள், ஐ.நா.,வின் தற்போதைய செயல்பாடு மற்றும் அதன் சீர்திருத்தம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

ஐ.நா., 51 உறுப்பு நாடுகளுடன் துவங்கியது. தற்போது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், பழைய நிர்வாக அமைப்பையே தொடர்ந்து வைத்திருப்பது நடை முறைக்கு ஏற்றதாக இருக்காது.

ஈரான் போர், உக்ரைன் போர், ஆப்ரிக்காவில் நிலவும் பிரச்னைகள், கொரோனா தொற்று போன்ற விவகாரங்களில் ஐ.நா., எந்த பயனுள்ள முடிவையும் எடுக்கவில்லை.

அதே போல் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், உலக நாடுகளின் ஒட்டுமொத்த நலனை பிரதிபலிக்கவில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது.

ஐ.நா.,வில் சீர்திருத்தம் செய்வதற்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஐ.நா.,வின் செயல்திறன் குறைந்து வருவதை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதற்காக ஐ.நா.,வை புறக்கணிக்கவும் கூடாது. அதை சீர்திருத்துவதே நம் பணியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us