ADDED : ஏப் 27, 2024 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல் இரண்டு கட்ட ஓட்டுப்பதிவில் பா.ஜ.,வுக்கு ஓட்டுகள் விழவில்லை. கட்சியின் மோசமான நிலை குறித்த உண்மையை பா.ஜ., பூத் ஏஜென்ட்கள் கூறுகின்றனர். வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு காரணங்களால் மக்கள் பா.ஜ., பக்கம் இல்லை.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி
கேள்வி கேட்க வேண்டும்!
ராமர் என்ற ஒருவர் இல்லை என காங்கிரஸ் கூறுகிறது. ராமர், கிருஷ்ணர் என்ற கடவுள்கள் இல்லை என கூறியவர்களுக்கு, இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். அவர்களின் இருப்பு குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.
யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,
நாடே என்னை விரும்புகிறது!
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் பா.ஜ.,வை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். அதே போல், நான் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என ஒட்டுமொத்த நாடும் விரும்புகிறது.
ராபர்ட் வாத்ரா, பிரியங்கா கணவர்

