தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வலை வளை: நவ. 17

வலை வளை: நவ. 17

வலை வளை: நவ. 17


UPDATED : நவ 17, 2026 12:00 AM

ADDED : நவ 16, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 12:00 AM ADDED : நவ 16, 2026 08:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பைக்கில் துரத்திய ஊழியர்கள்

சிங்கத்துக்கு ரொம்ப அசிங்கம்

குஜராத்தின் அம்பர்டி வன உயிரின பூங்காவில், வனத்துறை ஊழியர்கள் மூவர், இருசக்கர வாகனங்களில் சென்று சிங்கத்தை துரத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. கண்டனம் எழுந்ததும், கிர் வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் அமித் வனியா, ‘சிங்கத்தை யாரும் துன்புறுத்தவில்லை. அதன் தங்குமிடத்துக்கு வழிநடத்தவே வன ஊழியர்கள் முயன்றதாகவும்’ கூறி சமாளித்தார்.

‘தீபாவளி விடுமுறையால் பார்வையாளர்கள் அதிகம் வந்திருந்தனர். மாலையில் சபாரி முடிந்த பின், ஒரு சிங்கம் கிராலுக்கு செல்லாமல் வேறு திசையில் சென்றது. அதை கிராலுக்கு அனுப்பவே ஊழியர்கள் பைக்கில் சென்று விரட்டினர்’ என்கிறார், அவர். விசாரணை முடிவில் விதிகளுக்கு புறம்பாக பைக்கில் சிங்கத்தை விரட்டிய தற்காலிக ஊழியர்கள் மூன்று பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

நடுக்கடலில் சத் பூஜை

கப்பல் கேப்டனின் பக்தி

வணிக கப்பலில் கேப்டனாக பணியாற்றும் மிதிலேஷ் குமார், பீஹாரின் முக்கிய பண்டிகையான சத் பூஜையை கப்பலிலேயே கொண்டாடினார். ‘குடும்பத்தை விட்டுத் தொலைவில் இருந்தாலும், கலாசார வேர்களை மறக்கவில்லை’ என்றார், அவர். கப்பலின் உட்பகுதிகளை சுத்தம் செய்வது, சடங்குகளுக்கு ஏற்பாடு செய்வது, விருந்து சமைப்பது என, பணியாளர்கள் அனைவரும் அவருக்கு உதவினர். இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்த வழிபாடு வீடியோவை பார்த்த பலர், அவரது நம்பிக்கைக்கு தலைவணங்குவதாக கூறி பதிவிட்டனர்.

தடை விதித்த அதிகாரி

பாடகருக்கு வந்த ஆவேசம்

பஞ்சாபி பாடகரும், நடிகருமான தில்ஜித் தோசாஞ்ச், நவ., 15ல், மத்திய பிரதேசத்தின் இந்துாரில் நடந்த இசை நிகழ்ச்சியில், ‘மகா காளியின் மண்ணில் நான் நிகழ்ச்சி நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது’ என, ரசிகர்கள் ஆரவாரத்துக்கு மத்தியில் பேசினார். ‘அன்றும் இன்றும் நான் அஞ்சவில்லை’ என்ற அவர், மறைந்த உருது கவிஞர் ராஹத் இந்தோரியின் உணர்ச்சி மிகுந்த வரிகளையும் வாசித்து காட்டினார்.

அவரது ஆல்பத்தில் சர்ச்சைக்குரிய வரிகள் இருப்பதாக கூறி, 4 பாடல்களை இசை நிகழ்ச்சியில் பாடக்கூடாது என, இந்துார் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இதுவே அவரது ஆவேசத்துக்கு காரணம். எனினும், இசை நிகழ்ச்சி சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

ரேபிடோ கட்டணம்

‘டி.ஜே.,’வுக்கு அதிர்ச்சி

இத்தாலிய டி.ஜே.,வும், இசை அமைப்பாளருமான ஒலி எஸ்ஸே, சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் தனக்கு ஏற்பட்ட, ‘ரேபிடோ’ அனுபவத்தை, ‘எக்ஸ்’ தளத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். ‘ஹோட்டலில் இருந்து விமான நிலையத்துக்கு வெறும், 10 நிமிட பயணம்; செயலியில் கட்டணம், 281 ரூபாய் என, காட்டியது. பல டிரைவர்கள் அந்த தொகைக்கு வர மறுத்தனர்; கூடுதல் கட்டணம் கேட்டனர்’ என்பது அவரது புகார். ஒருவர் பயணத்தை ஏற்கவே கூடுதலாக, 500 ரூபாய் கேட்டதாகவும் அவர் கூறினார். பதிவை பார்த்த வலைதள பிரியர்கள் பலரும், இதேபோன்ற புகார்களை பகிர்ந்தனர். இத்தகைய டிரைவர்களை, ‘ரேபிடோ’ தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

முத்தம் கேட்டு சேட்டை

வலைதளவாசிகள் அதிர்ச்சி

ராஜஸ்தானின் உதய்பூரில், பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்த ‘யூ டியூபர்’ ஜஸ்ட்கெத் இரவு நேரத்தில் நேரலையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை அணுகிய ஒருவர், ‘ஒரு முத்தம் கொடுங்க’ என, கேட்டார். ‘ஒரு முத்தம் ப்ளீஸ், ஒரு உதட்டு முத்தம்’ என, அவர் திரும்ப திரும்பக் கேட்டார். கூட்டம் நிறைந்த பொது இடத்தில் நேரலையில் இந்த நிகழ்வு நடந்தது. ஜஸ்ட்கெத் மிகவும் உறுதியாக மறுத்து விட்டார். அவர் தர்மசங்கடத்துக்கு ஆளானது வீடியோவில் தெளிவாக தெரிந்தது. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த வலைதளவாசிகள், ‘இது போன்ற நபர்களால் தான் நம் நாட்டுக்கே அவப்பெயர் ஏற்படுவதாக’ வேதனை தெரிவித்தனர்.

குப்பை கொட்டும் மக்கள்

சுத்தம் செய்த பிட்டு வருத்தம்

சுற்றுச்சூழல் ஆர்வலரான கல்லுாரி மாணவர் பிட்டு தபாஹி, ம.பி., அஜ்னார் நதியை துாய்மை செய்து புகழ் பெற்றவர். எத்தனை முறை சுத்தம் செய்தாலும் மக்கள் மீண்டும் நதியில் குப்பை கொட்டுவதால் மனம் வருந்திய அவர், மருத்துவமனையில் படுத்திருப்பதையும், தொற்றால் பாதிக்கப்பட்ட கைகளையும், வீடியோவில் காண்பித்தார். மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வதால் உடல்நிலை மோசமடைந்து பல தொற்று ஏற்படுவதாகவும், மக்கள் அந்தளவுக்கு ஆதரவு தராதது வருத்தம் அளிப்பதாகவும் கூறினார். ‘ஆதரவு இல்லாவிட்டாலும் என் பணியை செய்வேன்; மக்களின் மனநிலை மாறும் என நம்புவதாக’ தெரிவித்தார் பிட்டு. வலைதளவாசிகள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us