ADDED : நவ 16, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு அம்பகரத்துார் காலனி தெருவில் சட்டவிரோதமாக மூன்று இலக்க கேரளா லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக இன்று (நவ.,16) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் அந்த பகுதியில் ரோந்துசென்ற போலீசார் அங்கன்வாடி அருகே சந்தேகத்திற்கிடமாக நபரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதி காலனி தெருவைச் சேர்ந்த சுகுமாரன்,47; எனத் தெரியவந்தது. இவர் சட்டவிரோதமாக மூன்று இலக்க லாட்டரி எண்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அம்பகரத்துார் போலீசார் சுகுமாரனை கைது செய்து,அவரிடம் மொபைல் போன் மற்றும் மூன்று இலக்க ரகசிய எண்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
I
