UPDATED : நவ 16, 2026 11:03 PM
ADDED : நவ 16, 2026 08:04 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: பெத்துசெட்டிப்பேட்டை சிவசுப்பரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழாவையொட்டி நடந்த திருதேர் வீதியுலாவை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
லாஸ்பேட்டை தொகுதி பெத்துசெட்டிப்பேட் சித்திவிநாயகர் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் 45ம் ஆண்டு கந்தர்சஷ்டி சூரசம்ஹார திருவிழா நடந்தது. விழாவில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் சிவக்கொழுந்து, சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய திருத்தேரினை வீதி உலாவிற்கு துவக்கி வைத்து, பக்தர்களுக்கு பாதாம் பால் வழங்கினர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
