காங். எம்.எல்.ஏ., வீட்டில் 'கன்னம்' வைத்த கொள்ளையர்கள்..!கிடைச்சது வெறும் ரூ.15,000தான்
காங். எம்.எல்.ஏ., வீட்டில் 'கன்னம்' வைத்த கொள்ளையர்கள்..!கிடைச்சது வெறும் ரூ.15,000தான்
UPDATED : ஆக 16, 2024 10:51 AM
ADDED : ஆக 16, 2024 10:43 AM

போபால்; மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் எம்.எல்.ஏ.,க்களுக்கு மாநில அரசு சார்பில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதன்படி, ஷர் இம்லி பகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜெய்வர்தன் சிங் என்பவருக்கு D 21 என்ற இலக்கமிட்ட வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அந்த வீட்டின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அலமாரியில் வைத்திருந்த சூட்கேசை உடைத்து அதில் இருந்த ரூ.15,000த்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
தகவலறிந்த எம்.எல்.ஏ., ஜெயவர்தன் சிங் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு விவரத்தை கூறி உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு நடத்தினர். அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

