sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கர்நாடக அரசு துறையில் காலி பணியிடங்கள் 2.75 லட்சம்!: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத காங்கிரஸ்

/

கர்நாடக அரசு துறையில் காலி பணியிடங்கள் 2.75 லட்சம்!: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத காங்கிரஸ்

கர்நாடக அரசு துறையில் காலி பணியிடங்கள் 2.75 லட்சம்!: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத காங்கிரஸ்

கர்நாடக அரசு துறையில் காலி பணியிடங்கள் 2.75 லட்சம்!: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத காங்கிரஸ்


ADDED : டிச 27, 2024 05:34 AM

Google News

ADDED : டிச 27, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் பல்வேறு அரசு துறைகளில், மொத்தம் 2.75 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 'ஆட்சிக்கு வந்ததும் ஓராண்டில் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும்' என, தேர்தலின் போது காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.

கர்நாடகாவில் விவசாயம், உள்துறை, நகர மேம்பாடு, சுகாதாரம், சுற்றுலா, கல்வி, உணவு பொது வினியோகம், மின்சாரம், நீர்ப்பாசனம், கலால், மருத்துவ கல்வி, வருவாய், கிராம மேம்பாட்டு பஞ்சாயத்து ராஜ் உட்பட 72 துறைகளில் மொத்தம் 7.72 லட்சம் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், 5.2 லட்சம் ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

கடந்தாண்டு வரை 2.55 லட்சம் பணியிடங்கள் காலியாக இருந்தன. அப்போது, முதல்வராக இருந்த பா.ஜ.,வின் பசவராஜ் பொம்மை, 'விரைவில் 1 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று அறிவித்தார். அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன. ஆனால் சில சட்ட சிக்கலால், இந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

* நீதிமன்றம்

இது தொடர்பாக, அரசு தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவலின்படி, 'அரசு துறைகளில் இன்று அறிவித்து, நாளை பணியிடங்களை நிரப்ப முடியாது. இதற்கென விதிமுறைகள் உள்ளன. இது தொடர்பாக அரசு பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, அத்துறை ஊழியர்களின் நிலை குறித்து கேட்டறியும்.

அதன்பின், கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பொது சேவை கமிஷன் மூலம் தேர்வு எழுத அழைப்பு விடுக்கும். அத்துடன், பல்வேறு சட்ட சிக்கல்களால், 45,000 பணியிடங்கள் நிரப்ப முடியாமல், நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன' என தெரியவந்தது.

கடந்தாண்டு சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதியில், 'கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால், ஓராண்டில் காலியாக உள்ள 2.55 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்தும் இன்னும் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

* அதிகரிப்பு

அதே நேரம், 18 மாதங்களில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 20,000 அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அரசு துறைகளில், 2.75 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு அரசின் வாக்குறுதி திட்டங்களே காரணம் என்று கூறப்படுகிறது

அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க 'சக்தி' திட்டம்; பி.பி.எல்., ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் 'அன்னபாக்யா' திட்டம்; 200 யூனிட் மின்சாரம் வரை இலவசமாக வழங்கப்படும், 'கிரஹ ஜோதி' திட்டம்; வீட்டு பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'கிரஹ லட்சுமி' திட்டம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் முறையே 1,500, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'யுவ நிதி' திட்டத்துக்கு ஆண்டுதோறும் 56,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது.

இதனால், மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் செய்ய முடியவில்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களே, தொகுதி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

* காத்திருப்பு

அதேவேளையில், காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, ஏழாவது நிதி கமிஷன் அறிக்கைக்காக அரசு காத்திருக்கிறது. இது தொடர்பாக கமிஷன் அதிகாரிகள் கூறுகையில், 'அரசு காலி பணியிடங்களை நிரப்பினால், அரசுக்கு ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும். தற்போது, அரசின் வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றவும், அதற்கான வருவாயை அதிகரிக்கவும் மட்டுமே அரசு முயற்சித்து வருகிறது' என்றனர்.

கார்காலா பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் குமார் கூறியதாவது:

அரசு துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. அத்துடன், ஊழலுக்கும் வழிவகுக்கிறது. வீடு கட்ட நினைக்கும் மக்களின் எண்ணம் நிறைவேற, விவசாய நிலத்தை, வருவாய் நிலமாக மாற்ற வேண்டும்.

இதற்காக நகர மேம்பாட்டு துறையில் விண்ணப்பிக்க வேண்டும். எங்கள் உடுப்பி மாவட்டத்தில் இத்துறையில் இரண்டு ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். பின் எப்படி நிலத்தை நேரில் சென்று ஆய்வு செய்ய முடியும். விண்ணப்பத்துக்கு இதுவரை, 2,000 ரூபாயாக இருந்தது, தற்போது 20,000 ரூபாயாக அதிகரித்து உள்ளது. இங்கு 65 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

... புல் அவுட்...

மாநில அரசின் பல்வேறு துறைகளில் ஸ்டெனோகிராபர், டைப்பிஸ்ட், ஓட்டுனர்கள் உட்பட 'சி', 'டி' குரூப் ஊழியர்களில், 96,000 பேர், ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர்.

தர்ஷன் புட்டண்ணய்யா,

சுயேச்சை எம்.எல்.ஏ.,

மேலுகோட்டே

***






      Dinamalar
      Follow us