கற்பதற்கு வயது வரம்பு இல்லை... வார இறுதி நாட்களை படிப்பதில் செலவிடும் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா
கற்பதற்கு வயது வரம்பு இல்லை... வார இறுதி நாட்களை படிப்பதில் செலவிடும் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா
ADDED : டிச 06, 2025 08:50 AM

புதுடில்லி: வார இறுதி நாட்களை படிப்பதில் செலவிடுவதாக மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக, சத்யா நாதெல்லா கூறியதாவது: வார இறுதி நாட்களை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்பாக கற்றுக் கொள்வதில் செலவிடுகிறேன். ஏஐ உருவாக்கும் போட்டி, எங்கள் நிறுவனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. புதிய நிறுவனங்கள் மைக்ரோசாப்ட் பொருத்த முடியாத வேகத்தில் தயாரிப்புகளை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்காக, படித்து வருகிறேன். உண்மையான சவால் மனரீதியானது.
வெற்றியைத் தாண்டி சென்றவர்கள், அனைத்தும் தெரியும் என்ற மனநிலையை கைவிட்டு, அதற்குப் பதிலாக அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெற்றிக்கு நான்கு அடிப்படை மாற்றம் தேவை. நவீன ஏஐ தொழில்நுட்ப செயலிகள் குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்.
ஊழியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். நிறுவனத்தின் பாரம்பரிய வழிமுறைகளை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். மிகவும் வெற்றிகரமான தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட அடிப்படையில் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அது பிரச்னையை ஏற்படுத்தும். இவ்வாறு சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

