ADDED : ஜன 30, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே ஒன்றன்பின் ஒன்றாக பொய்களைப் பேசுகிறார். எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் மிகவும் தந்திரமானவர், நுட்பமானவர். மணீஷ் சிசோடியாவுடன் இணைந்து கெஜ்ரிவால் செய்த ஊழல், மக்களுக்கு புரியாது என்று தப்புக்கணக்கு போடுகின்றனர்
நானும் என் கட்சியும் பா.ஜ.,வுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நான் 55 மணி நேர விசாரணையை எதிர்கொண்டேன், அவர்கள் என் மீது 32 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். ஆனால் நான் பயப்படவில்லை. நான் ஓடிப்போகவில்லை. நீங்கள் என்னை கைது செய்யலாம் என்று சொன்னேன். இவர்களுடன் சமரசம் செய்து கொள்வதற்கு பதிலாக நாங்கள் இறந்துவிடுவோம்.
ராகுல்
எதிர்க்கட்சித் தலைவர்
மக்களவை - காங்கிரஸ்

