தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மனித சிந்தனைக்கு ஈடு இணை எதுவும் இல்லை: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேச்சு

மனித சிந்தனைக்கு ஈடு இணை எதுவும் இல்லை: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேச்சு

மனித சிந்தனைக்கு ஈடு இணை எதுவும் இல்லை: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேச்சு


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 05:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: “செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட தரவு பகுப்பாய்வு மற்றும் சிக்கலான வணிக மாதிரிகள் ஆகியவை நிறுவனங்களின் செயல்பாட்டு முறையை மாற்றியமைத்து வரும் நிலையில், பெருநிறுவனங்களின் சுறுசுறுப்பான செயல்பாடும் மேம்பட்ட நிர்வாக நடைமுறைகளும் மிகவும் அவசியம்,”என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இந்திய நிறுவன செயலர்கள் அமைப்பின், 58வது ஆண்டு விழா டில்லியில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் குறைபாடற்ற பெருநிறுவன நிர்வாகம் ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்க வைக்கின்றன.

அந்த நம்பிக்கையை இழந்தால், அந்த நிறுவனத்துக்கு முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை. தொழில் நுட்பத்தின் விரைவான வளர்ச்சியின் பின்னணியில், இன்று முக்கியமானதாக கருதப்படுபவை அடுத்த சில மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ தேவையற்றதாகி விடும். ஆனால், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப அனைவரும் நம்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட தரவு பகுப்பாய்வு, டிஜிட்டல் தளங்கள் மற்றும் பெருகிய முறையில் சிக்கலான வணிக மாதிரிகள் ஆகியவை நிறுவனங்களின் செயல்பாட்டு முறையை மாற்றியமைக்கின்றன. அதில், நிறுவனச் செயலர்களின் பங்கு மேலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்குவதையும், பெருநிறுவன நிர்வாக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்வதில் நிறுவன செயலர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தரவு பகுப்பாய்வு ஆகியவற்றால் உந்தப்படும் விரைவான பரிணாம வளர்ச்சிக்கு, பெருநிறுவனங்களின் சுறுசுறுப்பான செயல்பாடும் மேம்பட்ட நிர்வாக நடைமுறைகளும் மிகவும் அவசியம்.

தகவல்கள் உருவாக்கப்படும் மற்றும் முடிவுகள் எடுக்கப்படும் விதத்தை தொழில்நுட்பம் மாற்றியமைக்கலாம். ஆனால் நேர்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை காப்பது நிறுவன செயலர்களின் பொறுப்பு.

மனித சிந்தனைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. நம் நாட்டின் பெருநிறுவன துறையின் சட்ட மற்றும் அறநெறி சார்ந்த அடித்தளத்தைக் காக்கும் வகையில் நிறுவன செயலர்கள் பணியாற்றுகின்றனர். மக்கள் நலன்களை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகளில் சிறந்த நிர்வாகம் அவசியம்.

பெருநிறுவன நிர்வாக நடைமுறைகள் தனிநபர்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தன்னிறைவு பெற்ற மற்றும் வளர்ந்த நாடாக நம்நாடு வளர்ச்சியடைய இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக நம்நாடு மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

உலகின் மிகப்பெரிய ஒற்றைப் பொருளாதார சக்தியாக நாம் மாற விரும்புகிறோம்? மற்றவர்கள் மீது நம் நிபந்தனைகளைத் திணிப்பதற்காக அல்ல. அதேபோல, யாரும் தேவையற்ற நிபந்தனைகளை நம் மீது திணிக்கக்கூடாது என்பதற்காகவே அந்த இலக்கை நோக்கி பயணிக்கிறோம். ஒரு நாட்டின் சுயமரியாதை அதில் தான் அடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us