sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெட்ரோல், டீசல், காஸ் பற்றாக்குறை இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்

/

பெட்ரோல், டீசல், காஸ் பற்றாக்குறை இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்

பெட்ரோல், டீசல், காஸ் பற்றாக்குறை இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்

பெட்ரோல், டீசல், காஸ் பற்றாக்குறை இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்

2


ADDED : மார் 05, 2026 05:46 PM

Google News

2

ADDED : மார் 05, 2026 05:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவில் எல்பிஜி, எல்என்ஜிக்கு பற்றாக்குறை இல்லை எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, இன்னும் பல அமைப்புகளுடன் பேச்சு நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. சவுதி உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் கிணறுகள் மீது ஏவுகணைகளை வீசுகிறது. மேலும் சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் ஆயில் டேங்கர் கப்பல்களை தாக்குவதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், காஸ் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

இந்தியாவிடம் போதுமான அளவு எரிசக்தி உள்ளது.

* எல்பிஜி மற்றும் எல்என்ஜி பற்றாக்குறை இல்லை. உலகில் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை இல்லை. மற்ற விநியோகஸ்தர்களுடன் இந்தியா தொடர்பில் உள்ளது.

*இந்தியாவுக்கு கேஸ் விநியோகம் செய்ய தயாராக உளளதாக ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் அறிவித்துள்ளன. மாற்று வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

*இந்தியாவுக்கு 195 MMSCMD( Million metric Standard CUbic Meters Per day) காஸ் இறக்குமதி செய்யப்படுகிறது. அதில் 60 MMSCMD அளவு மட்டுமே கத்தாரில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மாற்று வழிகளில் காஸ் இறக்குமதி செய்வதற்கான வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம்

*கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து முக்கிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் இந்தியா பேசி வருகிறது.

*சர்வதேச எரிசக்தி முகமை(IEA) மற்றும் ஒபெக் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

* கப்பல்களுக்கு காப்பீடு குறித்து அமெரிக்கா உடனும் பேசி வருகிறோம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எரிசக்தி நிலவரம் குறித்து ஆய்வு செய்கிறோம். இவ்வாறு அந்த அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






      Dinamalar
      Follow us