ADDED : பிப் 06, 2025 12:25 AM

ஜம்மு - காஷ்மீர் அரசின் முயற்சிகளால் இங்கு பயங்கரவாத சூழல் வலுவிழந்துள்ளது. நம் நாட்டு எல்லைக்குள் ஒருவர் கூட ஊடுருவக் கூடாது என்ற இலக்குடன் அனைத்து பாதுகாப்பு படையினரும் செயல்பட வேண்டும். எல்லை தாண்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமித் ஷா, மத்திய அமைச்சர், பா.ஜ.,
தொலைநோக்கு பார்வை!
'மேக் இன் இந்தியா' நல்ல முயற்சி தான் என்றாலும் அது தோல்வியை தழுவியுள்ளது. 2014ல் நாட்டின் ஜி.டி.பி.,யில் உற்பத்தி பொருட்களின் பங்கு 15.3 சதவீதம். அது தற்போது 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 12.6 சதவீதமாக சரிந்துள்ளது. நம் உற்பத்தி அமைப்புகளை உருவாக்க தொலைநோக்கு பார்வை தேவை.
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,
கல்வியே வளர்ச்சியை தரும்!
வளர்ந்த பாரதத்திற்காக ஓட்டளியுங்கள் என்று அதிகாரி ஒருவர் கூறியதை கேட்டேன். அரசு அதிகாரி இப்படி கூறுவது சரியல்ல. இதுவும் பிரசாரம் தான். கல்வி தான் இந்தியாவை வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றும். நம் நாட்டில் பலருக்கு இன்னமும் கல்வி வாய்ப்பே கிடைப்பதில்லை.
கபில் சிபல், ராஜ்யசபா எம்.பி., - சுயேச்சை