காஷ்மீர் தாக்குதலில் நூலிழையில் தப்பிய கேரளா ஐகோர்ட் நீதிபதிகள்!
காஷ்மீர் தாக்குதலில் நூலிழையில் தப்பிய கேரளா ஐகோர்ட் நீதிபதிகள்!
ADDED : ஏப் 23, 2025 02:51 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த தாக்குதலில் இருந்து, கேரளா ஐகோர்ட் நீதிபதிகள் அஜித் குமார், கிரிஷ், நரேந்திரன் ஆகிய 3 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நூலிழையில் உயிர் தப்பினர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் தாக்குதல் நடந்த இடத்திற்கு கேரளா ஐகோர்ட் நீதிபதிகள் அஜித் குமார், கிரிஷ், நரேந்திரன் ஆகிய 3 பேர் சுற்றுலா சென்று இருந்தனர். அவர்கள் பஹல்காம் பகுதியில் பல்வேறு இடங்களுக்கு சுற்றிப்பார்த்து விட்டு திருப்பினர்.
அவர்கள் திரும்பிய சிறிது நேரத்தில் தான் அப்பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் நீதிபதிகள் 3 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நூலிழையில் உயிர் தப்பினர்.
பஹல்காம் மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இப்பகுதி எப்போதும் சுற்றுலா பயணியர் நிறைந்து காணப்படும். இங்கு தான் ஒரு மாதமாக சுற்றுலா பயணிகள் திட்டம் தீட்டி தாக்குதல் நடத்தி உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மவுன அஞ்சலி
பஹல்காம் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவருக்காக, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.