ADDED : ஜன 02, 2026 12:30 AM

மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., அரசில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. இங்குள்ள நிலங்கள், மாபியா கும்பலிடம் சிக்கியுள்ளது. பெரும்பாலான மக்கள், கட்டாயத்தின் பேரில் வெளியேற்றப்படுகின்றனர். ஊடுருவல்காரர்கள், மேற்கு வங்கத்தின் கலாசார அடையாளத்தை அழிக்கின்றனர்.
அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
பா.ஜ., திட்டம் பலிக்காது!
மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். பா.ஜ.,வின் திட்டம் இங்கு பலிக்காது. முதலில் மேற்கு வங்கத்தில் பா.ஜ., தோல்வி அடையும்; அதன்பின் உத்தர பிரதேசத்திலும் அக்கட்சி தோல்வியை தழுவும்.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி
எம்.எல்.ஏ.,க்கள் கொத்தடிமைகளா?
தகுதிவாய்ந்த வாக்காளர்களை நீக்குவது குறித்து கேள்வி எழுப்பினால், என் மீதே தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் குற்றம் சுமத்துகிறார். நான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர். மக்களின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கிறேன். தேர்தல் கமிஷனுக்கு நாங்கள் கொத்தடிமைகளா?
அபிஷேக் பானர்ஜி பொதுச்செயலர், திரிணமுல் காங்.,

