ஹிந்துக்கள் மீதே குறி வைக்கிறார்கள்: பவன் கல்யாண் குற்றச்சாட்டு
ஹிந்துக்கள் மீதே குறி வைக்கிறார்கள்: பவன் கல்யாண் குற்றச்சாட்டு
ADDED : டிச 11, 2025 07:08 PM

அமராவதி: அனைவரும் ஹிந்துக்கள் மீதே குறி வைக்கிறார்கள் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் குற்றம்சாட்டியுள்ளார்.
அமராவதியில் பவன் கல்யாண் அளித்த பேட்டி:
அனைவரும் ஹிந்துக்களை குறிவைக்கிறார்கள், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களின் மரபுகளை கேள்வி கேட்கிறார்கள், அவர்களிடம் எதிர்ப்பை காட்டுவது ஒவ்வொரு ஹிந்துவுக்கும் பொறுப்பாகும்.
தமிழகத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி 'ஹிந்து சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும்' தீர்ப்பை வழங்கிய பிறகு, பார்லியில், 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நீதிபதி மீதான கண்டன தீர்மானத்திற்கு மனு தாக்கல் செய்தனர்.
அதேவேளையில், சபரிமலை கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியபோது, ஹிந்துக்கள் சட்டப்படி போராடினார்களே தவிர, நீதிபதிகள் மீது கண்டனத் தீர்மானம் கோரவில்லை.
இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.

