தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


ADDED : ஆக 14, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சொல்கிறார்கள் / 15/08/26 சனிக்கிழமை இதழ்

-–––––––––

ஆனந்த விகடன், ஜூலை 1, 2026, பக்: 67

––––––––––

‘பயங்கரவாதிகளை

நேருக்கு நேர்

நின்று அழித்தேன்!’

-----––––––––––

நம் நாட்டின் இரண்டாவது உயரிய ராணுவ விருதான, ‘கீர்த்தி சக்ரா’ பெற்ற ராணுவ வீரரான, தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த, 30 வயதாகும் மீனாட்சி சுந்தரம்:

எங்கள் ஊரில், இளைஞர்களை சிறு வயது முதலே, ‘ராணுவத்தில் சேர வேண்டும்’ என்று சொல்லி தான் வளர்க்கின்றனர். அப்பா, சிறிய உணவகம் நடத்தி வருகிறார். அவர், என்னை எப்படியாவது ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டார். நான், 10ம் வகுப்பு முடித்ததுமே, அதற்கான உடற்பயிற்சி, ஓட்டம் என இறங்கி விட்டேன்.

கடந்த 2017ல் ராணுவத்தில் சேர்ந்து, பல ஊர்களில் பணி செய்துள்ளேன். ராணுவத்தில் சாகச வேலைகளை, ‘34 ராஷ்ட்ரீய ரைபிள்ஸ்’ கம்பெனி தான் செய்யும். நானும் அந்தப் பிரிவில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்தேன். ஆறு ஆண்டுகளுக்குப் பின், 2024ல் தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவரை, பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்தோம். 2024 டிசம்பர் 19ல், தெற்கு காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில், அந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய ஆட்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

நாங்கள் அதிகாலை 3:30 மணிக்கு, அவர்கள் தங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்தோம். அந்த வீட்டிற்குள் ஐந்து பேர் இருந்தனர். இருவரை சுட்டுக் கொன்றோம்; மீதிமிருந்த மூவர் மாடி மேல் ஏறி தப்பிக்க முயற்சி செய்தனர். அவர்கள் தப்பித்து வெளியே வரும் வழியில் நான் நின்றிருந்தேன்.

அவர்கள் வெளியேற முடியாதபடி அரண் அமைத்து சுட ஆரம்பித்தேன்; அவர்களும் சுட ஆரம்பித்தனர். அவர்கள் சுட்டதில், என் இடது பக்க வாயை துளைத்த குண்டு, வலது கை மணிக்கட்டிலும், தோள்பட்டையிலும் பாய்ந்தது. அதற்குள் மற்ற ராணுவ வீரர்கள் அங்கு வந்து, மூன்று பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.

என்னுடன் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் இருந்தார். அவர் தான், என்னை ஆம்புலன்சுக்கு துாக்கிச் சென்றார். சண்டை நடந்த இடத்தில் இருந்து, 90 கி.மீ., தாண்டி தான் மருத்துவமனை இருந்தது.

அந்த நேரம், என் மனைவி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். மருத்துவமனைக்கு பயணித்த ஒன்றரை மணி நேரமும் எனக்கு மனைவி குறித்த நினைவு தான் வந்தது. நான்கு மாதங்கள் சிகிச்சையில் இருந்தேன்; இன்னும் கூட சிகிச்சை முடியவில்லை.

எனக்கு விருது அறிவிக்கப்பட்ட போது, உண்மையிலேயே மிகவும் பெருமையாக இருந்தது. பயங்கரவாதிகளை நேருக்கு நேர் சந்தித்து வீழ்த்துவது, ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் கனவு; அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமையான விஷயம்.

தொடர்புக்கு: 63854 77621.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us